(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்றில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள 'தேசிய சபை' என்ற பாராளுமன்ற குழு தொடர்பான பிரேரணையை எதிர்வரும் 20ஆம் திகதி ஒழுங்குப் புத்தகம் மற்றும் ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.
இதற்கமைய இந்தக் குழுவின் தலைவர் பதவி சபாநாயகருக்கு வழங்கப்பட்வுள்ளதுடன், பிரதமர், பாராளுமன்ற சபை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேசிய சபையின் ஏனைய உறுப்பினர்களாவர்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 35 இற்கும் மேற்படாதோர் தேசிய சபையின் உறுப்பினர்களாக அங்கம் வகிப்பர்.
இதற்கமைய குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால தேசிய கொள்கைகளை வகுப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளை தீர்மானிப்பதற்கும், பொருளாதார ஸ்தீரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால பொதுவான நிகழ்ச்சி திட்டங்கள் தொடர்பான உடன்பாட்டை எட்டுதல், அமைச்சரவை அமைச்சர்கள், தேசிய சபை, விசேட குழுக்களின் தவிசாளர்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களின் அவதானிப்பாளர்கள் ஆகியோர் விசேட கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் தேசிய சபையில் முன்மொழிவுகள் செய்யப்படவுள்ளன.
தேசிய சபையானது துறைசார் மேற்பார்வைக் குழுக்கள், அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு அத்துடன் அரசாங்கக் கணக்குகளைக் கட்டுப்படுத்தும் ஏதேனும் குழு ஆகியவற்றிலிருந்து அறிக்கை கோருவதற்கான அதிகாரத்தை கொண்டிருக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM