பூமியில் உயிர்களைப் பாதுகாக்கும்  உலகளாவிய ஒத்துழைப்பு “சர்வதேச ஓசோன் தினமான இன்றாகும்”

By Vishnu

16 Sep, 2022 | 10:23 AM
image

சூரிய ஒளிப்பிளம்பின் ஒரு பகுதியான புறஊதாக் கதிர்வீச்சைத் தடுத்து நிறுத்தி புவியைக்காத்து வரும் வளையமே ஓசோன் (ozone) படலமாகும். அதாவது பூமியை போர்த்தி இருக்கும் ஒரு மெல்லிய வாயுப்படலம் எனலாம். கடல் மட்டத்தில் இருந்து 20கிலோமீற்றர்  தொடக்கம் 50கிலோமீற்றர் வரை உள்ள பகுதியில் தான் ஓசோன் உள்ளது. ஓசோன் என்பது மூன்று ஒட்சிசன் அணுக்கள் சேர்ந்திருக்கும் மூலக்கூறாகும். இது வளிமண்டலத்தின் மேல், வாயுநிலையில் காணப்படுகின்றது. இதுஈரணு ஒட்சிசன் மூலக்கூறு போல் நிலையான தன்மை இல்லாதது. இலகுவாக சிதைந்துவிடும் தன்மை கொண்டது. 1840ஆம் ஆண்டு சி.எப்.ஸ்கோன்பின் (Christian Friedrich Schonbein)  என்பவர் ஓசோனைக் கண்டுபிடித்தார். 

படைமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒளி-இரசாயண செயற்பாடு காரணமாக ஓசோன் வாயு உருவாகிறது. இதன் உருவாக்கத்திற்கு தனித்த ஒட்சிசன் அணுமூலக் கூறுகள் அவசியமாகும். படைமண்டலத்தில் ஒட்சிசன் வாயு மூலக்கூறுகளுடனான புறஊதாக் கதிர்களின் தாக்கத்தினால் ஒட்சிசன் அணுமூலக் கூறுகள் உருவாகின்றன. இந்த ஒட்சிசன் அணுமூலக் கூறானது உயர் வெப்பநிலை, அமுக்க நிலைமை காணப்படும் போது ஒட்சிசன் வாயு மூலக்கூறுகளுடன் இணைந்து ஓசோனாகி;றது. 

இவ்வாறு உருவாக்கப்படும் ஓசோன் மூலக்கூறு நிலையானதல்ல. இது மோதுகை, ஒளி-பிரிகையாக்கம் ஆகிய செயற்பாடுகளினால் சிதைக்கப்படும். அந்தாட்டிக்கா பனிக்கண்டத்தில் ஓசோன் அளவு பருவநிலைக்கேற்ப சிறிய அளவிலான மாறுதலுடன் சராசரியாக நிலவுகிறது. ஆனால் வசந்த காலத்தில் (ஆகஸ்ட், நவம்பர்) ஓசோன் அளவு சராசரி அளவில் 50 வீதம் முதல் 60 வீதம் வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த ஓசோன் குறைவே “ஓசோன் துவாரம்” (ozone hole) என்று அழைக்கப்படுகிறது. 

உண்மையில் இது துவாரம் இல்லை. இயற்கையில் ஓசோன் உருவாகும் அளவும் சிதைக்கப்படும் அளவும் சமமாக இருக்கும்போது வளிமண்டலத்தில் ஓசோனில் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் மனித செயற்பாட்டால் அதிகளவில் ஓசோன் சிதைக்கப்படுவதால் ஓசோனில் துவாரம் ஏற்படுகிறது. 

1980ஆம் ஆண்டில் அந்தாட்டிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட ஓசோன் துவாரம் மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் 30சதவீதம் குறைந்து காணப்பட்டது. இந்த வகையில் சர்வதேச ஓசோன் தினம் பற்றியும், ஓசோன் படலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? என்பது பற்றியும், ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும், ஓசோன் படலம் மாசுபடுவதை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. 

சர்வதேச ஓசோன் தினம்

ஓசோன் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஓசோனைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 16ஆம் திகதியை சர்வதேச ஓசோன் தினமாக கொண்டாடுகின்றது. சர்வதேச ஓசோன் தினத்துடன் இணைக்கப்பட்ட மிக முக்கியமான நிகழ்வு 1987இல் நடைபெற்ற மொன்றியல் மாநாட்டு ஒப்பந்தமாகும். 

இது ஐக்கிய நாடுகளின் 24இற்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் பாரிய ஒத்துழைப்பாகும். வளிமண்டலத்தில் ஓசோன் அடுக்கு குறைவதற்கு காரணமான குளோரோபுளோரோ காபன்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கூறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்காக அவர்கள் கையெழுத்திட்டு உறுதியளித்தனர். 

சர்வதேச ஓசோன் தினம் முதன்முதலில் 1995ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 1987இல் மொன்றியல் நெறிமுறை கையெழுத்திட்ட போதிலும் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை நிறுவும் நாள் 1995இல் தான் நிகழ்ந்தது. அந்தவகையில் இந்த ஆண்டு சர்வதேச ஓசோன் தினத்தின் தொனிப்பொருளாக “பூமியில் உயிர்களைப் பாதுகாக்கும் உலகளாவிய ஒத்துழைப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்தினத்தின் பிரதான நோக்கமாகும். 

பாதிக்கப்படுவது எவ்வாறு?

ஓசோன்படலம் பாதிக்கப்படுவதற்கு பொதுமக்கள் பயன்படுத்தும் இரசாயணப் பொருட்களே முக்கிய காரணமாகும். குறிப்பாக குளோரோபுளோரோ காபன் எனும் குளிரூட்டிப் பொருளே ஓசோனைச் சிதைத்து அதன் அளவைக் குறைப்பதில் முதல் இடத்தில் உள்ளது. குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், புகையிலை தொழிற்சாலைகள், தீயணைப்புக் கருவிகள், வர்ணம் அடிக்கும் பொருட்கள் போன்றவற்றில் குளோரோபுளோரோ காபன் எனும் வாயு பயன்படுத்தப்படுகிறது. 

இந்த வாயு வளிமண்டலத்திலுள்ள ஓசோன் துகள்களை தாக்குகிறது. இதனால் ஓசோன்படலத்தில் துவாரங்கள் ஏற்படுகின்றன. ஒரு குளோரோபுளோரோ மூலக்கூறு ஆயிரம் ஓசோன் மூலக்கூறுகளைச் சிதைக்கக் கூடியதாக இருப்பதால் ‘ஓசோன் கொல்லி’ என்று அதனை அழைக்கிறார்கள். 

ஏற்படும் தீமைகள்?

ஓசோன் அளவு குறைந்தால் பூமியின் வெப்பம் உயரும். துருவப்பகுதிகளில் பனிஉருகி கடலின் நீர்மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். ஓசோன் படலத்தில் ஏற்படும் தூவாரங்கள் வழியே பூமியை வந்தடையும் புறஊதாக் கதிர்கள் காலநிலையியல் மாற்றத்தை ஏற்படுத்தும். 

இக்கதிர்வீச்சு கண்நோய்கள், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்கியைக் குறைத்தல், தோல் புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும். இக்கதிர்கள் கடல் உணவுச் சங்கிலியில் முதலிடத்தில் உள்ள பிளாங்ரன் என்னும் மிதவை உயிரினங்களை எளிதில் கொல்லும். 

இவை அழிவதால் ஏனைய கடல் உயிரிகள் இல்லாமல் போகும் அபாயம் உருவாகும். பூமியிலுள்ள அனைத்து தாவரங்களிலும் பச்சையங்கள் பாதிக்கப்பட்டு விளைச்சல் இல்லாமல் தாவர இனமே அழிவைச் சந்தித்து விடும். நீர் மற்றும்; நிலத்தில் வாழும் விலங்குகள் இறக்க நேரிடும். இதனால் புவியில் உணவுச் சங்கிலி பாதிக்கப்படும். ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் புவி வெப்பநிலையானது அதிதூர இடைவெளியில் விரிவடைந்து சென்றால் சமுத்திரங்களின் நீர்மட்டம் உயர்வடையும். 

2030ஆம் ஆண்டளவில் 1.4  - 4.5 பாகை செல்சியஸ் வரை புவியின் வெப்பநிலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடல்மட்டதம்தின் உயர்வு 20உஅ-65உஅ வரை ஏற்படும். இவ்வாறு கடல்மட்டம் உயர்வதற்குக் காரணம் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்படலங்கள் அதிகரித்த வெப்பநிலை காரணமாக உருகி கடலை அடைகின்றது. அதனால் கடல்மட்டம் உயர்வடைகின்றது. 

காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழுவின் கணிப்பீட்டின்படி 2030ஆம் ஆண்டில் 20உஅ உம் 2100ஆம் ஆண்டில் 65உஅ உம் கடல்மட்டம் உயரலாம். பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றமானது ஸ்திரநிலையை அடைந்த பின்பும் கூட இந்தக் கடல்மட்ட உயர்வு குறிப்பிட்ட காலம் வரை இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். 

உலகில் மூன்றிலொரு பகுதி மக்கள் கடற்கரையிலிருந்து 60கிலோமீற்றர் தூரத்தில் வாழ்கின்றனர். கடல்மட்ட உயர்வு காரணமாக அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகள், பழக்கவழக்கங்கள், குடியிருப்புக்கள், கைத்தொழில், விவசாயம் என்பவற்றில் பாரியளவான தாக்கத்தை ஏற்படுத்தும். 

அத்துடன் இக்கடல் மட்ட உயர்வினால் சில நாடுகளின் நகரங்கள், துறைமுகங்கள், மாகாணங்கள் என்பன பாதிப்படையலாம். உதாரணமாக நெதர்லாந்து, பங்களாதேஷ், மாலைதீவு, கனடாவின் கரையோர மாகாணங்கள். அத்துடன் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள 21சிறிய தீவுகள் இக்கடல் மட்ட உயர்வு காரணமாக பல பிரச்சினைகளை எதிர்நோக்கலாம்.

தடுப்பதற்கான வழிமுறைகள்  

உலகளாவிய ரீதியில் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளை கட்டுப்படுத்த உலக அளவில் ஒட்டுமொத்தமான கூட்டுறவு முயற்சியும் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் மேற்கொள்ள பரவலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. 

குளோரோபுளோரோ காபனை வெளிவிடும் சாதனங்களை தடைசெய்ய வேண்டும். அதற்குப் பதிலாக மாற்று சாதனங்களை கண்டுபிடிக்க வேண்டும். குளோரோபுளோரோ காபன்களுக்குப் பதிலாக ஹைட்Nhh குளோரோபுளோரோ காபன்கள்இ ஹைட்ரோ ப்ளுரோ காபன்கள், ஹைட்ரோ காபன்களான பியூட்டேன் புரோபேன் போன்றவற்றையும் அமோனியா, நீர் மற்றும் நீராவி போன்றவை மாற்றுப் பொருட்களாகவும் பயன்படுத்தலாம். 

மிக முக்கியமாக புவியில் அதிகமாக மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் ஓசோன் படல இழப்பைக் குறைக்கலாம். பிளாஸ்ரிக் தொழிற்சாலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும். மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்கச் செய்யும் பிளாஸ்ரிக் பொலித்தீன் ஆகியவற்றின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். தற்போது பருவநிலை மாறுகிறது. இதன் காரணம் ஓசோன் படலமும், புவிவெப்பமயமாதலுமே நிகழ்கின்றது. 

1950களிலேயே ஓசோன் பற்றிய தகவல்கள் பெறப்பட்டாலும், தொலையுணர்வு அறிவின் உதவியுடன் கூடிய ஆழமான ஓப்பீட்டு ரீதியான ஆய்வுகள் 1980களின் பின்னரே ஆரம்பித்தன. சிட்னி சப்மன் என்ற விஞ்ஞானி ஓசோன் அறிவு பற்றி முதலில் ஆராய்ந்தார். உலக வளிமண்டலவியல் திணைக்களம் கடந்த பல வருடங்களாக வளிமண்டல ஓசோன் பற்றிய அளவீடுகளையும், ஆராட்ச்சிகளையும் நடாத்தி வருகிறது. 

1989ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஐரோப்பிய பொருளாதாரக்கூட்டு நாடுகளுடன் 44 நாடுகள் இணைந்து ஓசோன் பாதுகாப்புப் பற்றிய ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தின. இதன் வழியில் குளோரோபுளோரோ காபன்களின் உற்பத்தியை முதலில் தடைசெய்த நாடாக சுவீடன் அமைகிறது. தொடர்ந்து கனடா, Nஐர்மன் நாடுகள் இதனைப் பின்பற்றின. 1990 ஜுனில் 70நாடுகள் இலண்டனில் கூடி ஓசோனைப் பாதுகாக்கும் தொழினுட்ப பரிவர்த்தனை, குளோரோபுளோரோ காபன்களின் உற்பத்தியைத் தடைசெய்தல் ஆகியன பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்தின.

அதிசயிக்கும் விதமாக ஓசோனில் ஏற்பட்டிருந்த இராட்சத துளை தாமாக மூடிக்கொண்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய துளை தாமாக மூடிக்கொண்டதற்கு பூமியிலி இருந்து வெளியாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறைந்ததே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். 

ஆனால் இந்தக் கூற்றினை விஞ்ஞானிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட்டதும், அது தாமாக மூடியதும் “போலார் வோர்டெக்ஸ்” எனப்படும் வாயு சுழற்சியே காரணம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.  அண்மைக்கால ஆய்வுகளின்படி 2050ஆம் ஆண்டுகளில் ஓசோன் குறைபாடு எவ்வாறு காணப்படும் என்பது பற்றி முன்பு எதிர்வு கூறப்பட்டது. 

மொன்றியல் உடன்படிக்கையின் கொள்கைகளுக்கு இணங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின் மத்திய கோட்டுப் பகுதியில் ஓசோனின் குறைவுபடும் தன்மை நான்கு சதவீதத்திற்குப் பதில் ஓரு சதவீதமாகக் குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தாட்டிக்கா மீது ஓசோன் அடுக்கில் உள்ள துவாரம் இறுதியாக மூடத் தொடங்குகிறது என்பதற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 

இந்த முன்னேற்றம் தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டிற்குள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளார்கள். அத்துடன்  2030ஆம் ஆண்டிற்குள் ஓசோன் படலம் பழைய நிலைக்கு வந்துவிடும் எனவும் ஒரு கணிப்பு கணிக்கப்பட்டிருக்கிறது. 

கலாநிதி திருமதி சுபாஐினி உதயராசா

சிரேஷ்ட விரிவுரையாளர்

புவியியற்றுறை, யாழ்.பல்கலைக்கழகம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right