(ஆர்.யசி)

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் ஆரோக்கியமான ஒன்றாக இருந்த போதிலும் பூரணமான ஒன்றாக ஏற்றுகொள்ள முடியாது. அரசாங்கத்தில் சகல தரப்பின் ஒத்துழைப்புகளையும் ஆலோசனைகளையும் பெறாமலேயே வரவுசெலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது என ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சுமத்தியது. 

அபிவிருத்தியை அடைவதற்கு திருட்டு  வழிகளை தெரிவுசெய்யக் கூடாது எனவும் மாணவர்களுக்கு டெப் உபகரணம் வழங்கப்படக் கூடாது எனவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. 

ஜாதிக ஹெல உறுமைய கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.