(எம்.வை.எம்.சியாம்)
மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய ஐவர் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னர் நடைபெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய ஐவர் இவ்வாறு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சந்தேகநபர்கள் வாரியபொல மற்றும் கொகரெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான டி.பி. ஹேரத் மற்றும் யு.கே. சுமித் உடுகும்புர ஆகியோரின் வீடு, காரியாலயங்கள், மற்றும் கட்சி காரியாலயங்கள் உட்பட சொத்துகளுக்கு தீ மூட்டியமை மற்றும் சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 19, 27, 29, 36 மற்றும் 55 மலகலே, மெல்சிறிபுர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM