நீதிமன்றில் ஆஜராகாத விமலை வைத்திய அறிக்கையுடன் முன்னிலையாக பணிப்பு

Published By: Digital Desk 4

13 Sep, 2022 | 09:57 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சட்டத்துக்கு புறம்பான வழிகளில் சொத்து சேர்த்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு எதிராக  தொடரப்பட்டுள்ள வழக்கில், எதிர்வரும் 26 ஆம் திகதி வைத்திய அறிக்கையுடன் அவர்  கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கொழும்பு மேல் நீதிமன்றில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால்  தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த விவகாரத்தின் குற்றப் பத்திரிகையை மையப்படுத்திய வழக்கை, ' முன் விளக்க மாநாட்டுக்கு '( pre trial conference)  திகதி குறித்து  கொழும்பு மேல்  நீதிமன்றம் 13  ஆம் திகதி விசாரணைக்கு எடுத்தது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இவ்வாறு வழக்கு விசாரணைக்கு வந்திருந்தது.

 இதன்போது குற்றம் சட்டப்ப்ட்டுள்ள  பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மன்றில் ஆஜராகியிருக்கவில்லை. அவர் சார்பில் ஆஜரான இரு சட்டத்தரணிகள், விமல் வீரவன்ச திடீர் சுகயீனம் காரணமாக  சிகிச்சைப் பெறுவதால் மன்றில் ஆஜராக முடியவில்லை என தெரிவித்தனர்.  இதனையடுத்தே நீதிபதி நவரட்ன மாரசிங்க, எதிர்வரும் 26 ஆம் திகதி வைத்திய அறிக்கையுடன் விமல் வீரவன்சவை மன்றில் ஆஜராக உத்தரவிட்டார்.

விமல் வீரவங்ச அமைச்சராக இருந்த காலப்பகுதியில், அதாவது 2009 ஜனவரி முதலாம் திகதிக்கும் 2014 டிசம்பர் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், சம்பாதிக்கப்பட்ட வழி முறையை வெளிப்படுத்த முடியாத வகையில் சேர்க்கப்பட்ட 75 மில்லயன் ரூபா பணம் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலேயே இந்த சொத்துக் குவிப்பு வழக்கு தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.

 இது தொடர்பில் 26 குற்றச்சாட்டுக்களை விமல் மீது சுமத்தியுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக் குழு, அவற்றை நிரூபிப்பதற்காக 32 சாட்சிகள், 13 ஆவணங்கள் மற்றும் 40 தடயப் பொருட்களின் பட்டியலையும் நீதிமன்றில் சமர்பித்துள்ளது.

 விமலால் சட்டத்துக்கு புறம்பாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மேற்படி சொத்துக்களில் வீடு, வாகங்கள் மற்றும் பணம் ஆகியன உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51