(க.கமலநாதன்)

நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் சகலருக்குமான சுதந்திரம் உறுதிபடுத்தப்பட்டது. எனவே இந்த சுதந்திரத்தை உரிய வித்தில் பயன்படுத்திகொள்வது மக்களின் பொறுப்பாகும். 

ஆனால் மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டு சிலர் குறுகிய அரசியல் நோக்கத்தினை நிவர்தித்துக்கொள்ளவும், இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்கவும் எவருக்கும் அனுமதியளிக்கபோவதில்லை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொது தாதியர் சங்கத்தின் 47 ஆவது ஆண்டு விழா நிகழ்வு இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.