எரிவாயு கொள்வனவு தொடர்பில் போலிப் பிரச்சாரம் : சர்வதேச உதவிகளை பாதிக்கும் என்கிறார் லிட்ரோ தலைவர்

Published By: Vishnu

13 Sep, 2022 | 09:42 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எரிவாயு சிலிண்டர் கொள்வனவுக்காக உலக வங்கி வழங்கிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும்.

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பொறுப்பான தரப்பினர் குறிப்பிடும் பொய்யான கருத்துக்கள் கவலைக்குரியதாக உள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் உலக வங்கியின் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கும் தடையாக கருதப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைமை காரியாலயத்தில் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டில் தீவிரமடைந்த எரிவாயு தட்டுப்பாட்டுக்கு 25 நாட்களுக்குள் நிரந்தர தீர்வை வழங்கியுள்ளோம்.லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக ஜுலை மாதம் பதவியேற்றேம்.எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது சவால்மிக்கதாக காணப்பட்டாலும்,வெளிப்படை தன்மையிலான செயற்பாடுகள், மற்றும் சிறந்த தீர்மானங்களினால் எரிவாயு தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு எம்மால் கட்டம் கட்டமாக தீர்ரவை பெற்றுக்கொள்ள முடிந்தது.

நாட்டில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு இல்லை என்பதை பெருமையுடன் எம்மால் குறிப்பிட முடியும்.எரிவாயு கொள்வனவிற்காக உலக வங்கியின் நிதியுதவியை பெற்றுக்கொள்ள கோரிக்கை விடுத்த போது உலக வங்கி லிட்ரோ நிறுவனத்தின் கொள்வனவு செயற்பாடுகள் அனைத்தையும் முழுமையாக பரிசீலனை செய்ய எம்முடன் நேரடியாக பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது.

எரிவாயு கொள்வனவு வெளிப்படை தன்மையுனும், நேர்மையாகவும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னரே உலக வங்கி எரிவாயு கொள்வனவிற்காக நிதியுதவி வழங்கியது.எரிவாயு தட்டுப்பாட்டினால் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள மிக மோசமான நெருக்கடிக்கு விரைவாக தீர்வு வழங்க வேண்டும் என உலக வங்கி வலியுறுத்தியது.

உலக வங்கியின் நிதியுதவி வழங்கியதை தொடர்ந்து எரிவாயு விநியோகம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு,எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு எட்டப்பட்டது,அத்துடன் எரிவாயுவின் விலை இவ்விரு மாதங்களில் மாதத்தில் மாத்திரம் இருமுறை குறைக்கப்பட்டுள்ளன.இவ்வாறான பின்னணியில் எரிவாயு கொள்வனவிற்காக உலக வங்கி வழங்கிய நிதியுதவி மோசடி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றாகும்.

எரிவாயு கொள்வனவு தொடர்பில் அரசியல்வாதிகள் உட்பட எவரும் முன்வைக்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமாக பதிலளிக்க தயார்.பொறுப்பு வாய்ந்த தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கத்திற்hக பொய்யான செய்திகளை குறிப்பிடுகின்றனமை கவலைக்குரியதாகும். பொய்யான குற்றச்சாட்டுக்கள் எதிர்காலத்தில் உலக வங்கியிடமிருந்து உதவியை பெற்றுக்கொள்வதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38