(எம்.வை.எம்.சியாம்)
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளொன்றுக்கு 25 வீடுடைப்பு மற்றும் தங்க சங்கிலிகளை பறிக்கும் சம்பவங்கள் பதிவாகுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டில் தற்போது பல்வேறு குற்றச் செயல்கள், வன்முறைகள், மற்றும் கொலைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளொன்றுக்கு 25 வீடுடைப்பு மற்றும் தங்க சங்கிலிகளை பறிக்கும் சம்பவங்கள் பதிவாகிறது.
மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் இந்த குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது.
இதேவேளை, தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக ஆராய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், போதைப்பொருள் வியாபாரம் உட்பட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் தரப்பினர்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் மோதல்கள் இந்த கொலைச் சம்பவங்களுக்கு காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM