நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு

Published By: Digital Desk 3

13 Sep, 2022 | 01:17 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மீண்டும் மருந்து தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து உள்ள இந்த சந்தர்ப்பத்தில் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை, புற்றுநோய் வைத்தியசாலை உட்பட பல்வேறு வைத்தியசாலைகளும் மருந்து தட்டுப்பாடு காரணமாக வைத்திய செயற்பாடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைத்தியசாலைகளில் அனைத்து வகையான நோய்களுக்குமான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. 

அதன் காரணமாக வைத்தியசாலைகளில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதில் பாரியதொரு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

அதேவேளை, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சிறி சந்திரகுப்த இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பிட்ட சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போதிலும் வைத்தியசாலை செயற்பாடுகளில் எவ்வித பாதிப்பு இல்லை எனவும் தட்டுப்பாடு நிலவும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு வழங்கப்படும் 15 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

பெரும்பாலான மருந்துகள் நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்க பெறுவதாகவும் தட்டுப்பாடு நிலவும் ஏனைய மருந்துகளை உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10