நடிகர் வெற்றியின் 'இரவு'

By Vishnu

13 Sep, 2022 | 01:29 PM
image

'எட்டு தோட்டாக்கள்', 'ஜீவி' பட புகழ் நடிகர் வெற்றி நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'இரவு' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.

'சிகை', 'பக்ரீத்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம்: இரவு'. இதில் நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடிக்க, பிக் பொஸ் புகழ் நடிகை ஷிவானி நாராயணன்  அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இவர்களுடன் மன்சூர் அலிகான், சந்தான பாரதி, ராஜ்குமார், ஜார்ஜ், தீபா, பொன்னம்பலம், சேஷு, கல்கி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீனிவாஸ் தயாநிதி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை M10 புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். எஸ். முருகராஜ் தயாரிக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''வீடியோ கேம்ஸ் வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நாயகனின் வாழ்க்கையில், அவர் கற்பனையில் உருவாக்கிய கதாபாத்திரங்கள் நேரில் வர தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஓர் இரவில் நடைபெறும் பரபரப்பு மிகுந்த சம்பவங்களே இப்படத்தின் திரைக்கதை. பேய் கதைகள் பல வந்திருந்தாலும் 'இரவு' படத்தின் திரைக்கதை, உணர்வை மையமாக கொண்டிருக்கும்.'' என்றார்.

திரில்லர் படங்களைத் தொடர்ந்து தெரிவு செய்து நடித்து வரும் அருள்நிதி போன்ற நடிகர்களின் பட்டியலில் நடிகர் வெற்றியும் இணைந்திருக்கிறார்.  நடிகர் வெற்றியின் ‘இரவு’ படம், வெற்றிப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் வெளியீட்டு...

2022-09-26 22:23:03
news-image

சன்னி லியோன் நடிக்கும் 'ஓ மை...

2022-09-26 21:28:05
news-image

பொன்னியின் செல்வன் ; முக்கிய கதாபாத்திரங்கள்...

2022-09-26 16:40:20
news-image

பண மோசடி வழக்கு ; நடிகை...

2022-09-26 14:59:02
news-image

வேதிகா நடிக்கும் 'மஹால்' பட தொடக்க...

2022-09-25 13:08:17
news-image

மனச்சோர்வுக்கு மருந்தாகும் 'நித்தம் ஒரு வானம்'

2022-09-24 13:59:10
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட புதிய பாடல்...

2022-09-24 12:40:53
news-image

குழலி - விமர்சனம்

2022-09-23 16:37:54
news-image

அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின்...

2022-09-23 16:02:32
news-image

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்'

2022-09-23 11:21:04
news-image

தனுஷின் 'வாத்தி' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

2022-09-21 11:54:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-09-18 14:05:47