தரிசு நிலங்களில் பல விவசாயிகளுக்கு உத்வேகமான விளைச்சல் தரும் டிரகன் பழம் உற்பத்தி உள்ளது. இதன் விளைவாக உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் பொறியியல் பட்டதாரி ஒருவர் விவசாயத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளார்.
அலகஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிலஹவா கிராமத்தைச் சேர்ந்த அதுல் மிஸ்ரா, சென்னையில் கணினி அறிவியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
தனது சக கிராம மக்களுக்கு ஏதாவது செய்து தனது மாவட்டத்தின் மதிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் படிப்பை முடித்த பிறகு அதிக சம்பளம் தரும் வேலைக்கு செல்லவில்லை என்றார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் டிரகன் பழம் குறித்த ஆய்வில் ஈடுப்பட்டு அதனை பயிரிடுவதற்கு தேவையான நிலம் மற்றும் சூழல் குறித்து பரிசோதனை நடத்தினேன்.
2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள ஷோலாபூரில் இருந்து பிடஹாயா என்றும் அழைக்கப்படும் டிரகன் பழத்தின் சில மரக்கன்றுகளை கொண்டு வந்து தனது குடும்பத்திற்கு சொந்தமான ஒரு தரிசு நிலத்தில் பயிரிட்டேன். ஆதன் வெற்றியைக் கண்டு தற்போது எனது ஐந்து ஏக்கர் நிலத்தில் பழ விவசாயத்தை விரிவுபடுத்தியுள்ளேன். எங்கள் குடும்பத்தின் மேலும் ஏழு ஏக்கர் தரிசு நிலத்தில் அடுத்த பருவத்தில் டிரகன் பழம் விளையும்.
பெரிய அளவில் டிரகன் பழத்தை பயிரிட உதவுவதற்காக மூன்று ஆண்களையும் ஒரு பெண்ணையும் பணிக்கு அமர்த்தியுள்ளேன். பூஞ்சையிலிருந்து செடிகளைப் பாதுகாக்க பசுவின் சிறுநீர் மற்றும் மருந்து தெளிக்கப்படுகிறது. பீகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தன்னிடம் வரும் விவசாயிகளுக்கு டிரகன் பழ மரக்கன்றுகளையும் விற்பனை செய்து வருகிறேன்.
டிரகன் பழம் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு வெப்பமண்டல பழமாகும். அதன் சுவை ஒரு கிவி மற்றும் பேரிக்காய் கலவை போன்றது. இந்தியாவில், இது மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.
இந்த பழம் வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவிலும் வளர்க்கப்படுகிறது. பயிரிட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு பழம் கிடைக்கும். மே மாதத்தில் இருந்து தனது மரங்களில் பழங்கள் வர ஆரம்பித்து டிசம்பர் வரை தொடரும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM