தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை ஜனநாயக சீர்திருத்தங்களிற்கு வாய்ப்பில்லை - ஜெனீவாவில் நுவான் போபகே

Published By: Rajeeban

13 Sep, 2022 | 11:17 AM
image

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அர்த்தபூர்வமான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களிற்கான வாய்ப்பில்லை என  அரகலய செயற்பாட்டாளரான சட்டத்தரணிநுவான் போபகே  ஜெனீவாவில்  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 வது அமர்வில் உரையாற்றிய சட்டத்தரணி நுவான் போபகே  ஆர்ப்பாட்டங்களிற்கு எதிரான அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அர்த்தபூர்வமான மனித உரிமைகள் ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல்களிற்கான வாய்ப்புகள் குறித்த நம்பிக்கையை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர் என்னையும் பல ஆர்ப்பாட்டக்காரர்களையும் கைதுசெய்து சர்ச்சைக்குரிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைத்துள்ளனர்என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மாணவ செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்  தடுத்துவைக்கப்பட்டுள்ளனர், என தெரிவித்துள்ள நுவான் போபகே பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தப்போவதில்லை என்ற தனது வாக்குறுதிக்கு முரணாணக அரசாங்கம் செயற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி என்பது நீண்ட கால பிரச்சினைகளின் தொடர்ச்சி என தெரிவித்துள்ள  நுவான் போபகே  மனித உரிமை மீறல்கள்- ஒட்டுமொத்த யுத்தகால அநீதிகளிற்கு பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்காக ,அரசாங்கம்  முக்கிய பொறுப்புக்கூறும் நடைமுறைகளை சட்டத்தின் ,ஆட்சியை மனித உரிமை ஸ்தாபனங்களின் சுதந்திரம் ஆகியவற்றை திட்டமிட்டு அழித்தமை , ஊழல் அதிகார துஸ்பிரயோகம் தொடர்ச்சியாக பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்தல் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது இவையே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

 பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களிற்கு எங்கிருக்கின்றார்கள் என்பதற்காக தொடர்ந்து போராட்டங்களி;ல ஈடுபட்டுள்ள நிலையில் துன்புறுத்தலை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55