bestweb

இரவு உணவை தவிர்த்தால்...

Published By: Devika

13 Sep, 2022 | 12:17 PM
image

டல் எடையைக் குறைப்பதற்கு பல­ரும் வெவ்வேறு வழிமுறைகளை தெரிவு செய்கி­றார்கள். சிலர் இரவு உணவை தவிர்க்கும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இரவில் குறைந்த அளவிலாவது உணவு உட்கொள்ள வேண்டும். எதுவும் சாப்பிடா­மல் இருப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நம்புகிறார்கள். இரவு உண­வைத் தவிர்ப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்­மறையான தாக்­கத்தை அனுபவிக்கக்கூடும். 

இரவு உணவை தவிர்க்க முயற்சிப்ப­வர்­களில் சிலர் உணவுக்கு மாற்றாக துரித உணவு­களை தெரிவு செய்கிறார்கள். அது உடலில் சர்க்­கரை அளவையும், கவலையையும் அதி­க­ரிக்­கச் செய்யும். அதாவது, கார்டிசால் உற்பத்­தியை அதி­கரிக்கச் செய்யும். மன அழுத்த ஹோர்மோன் என அழைக்கப்படும் இது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடும். உயர் இரத்த அழுத்தம், பல­வீனம், கவலை, மனச்­சோர்வு போன்ற பாதிப்பு­களை­யும் ஏற்­படுத்திவிடும். இரவு உணவை தவிர்ப்­பது தூக்கமின்­மைக்கு வழி­­வகுக்கும். இது மன ஆரோக்கி­­யத்­­­தில் கடுமையான தாக்­கத்தை ஏற்­படுத்துவதோடு காலை உணவை தவிர்க்கவும் வழிவகுக்­கும். 

தூக்கத்திற்கு இடையூறாக இருக்­கும் மன அழுத்த ஹோர்­மோன்­களின் செயல்­பாடுகளை அதிகரிக்க செய்துவிடும். இரவு உணவைத் தவிர்ப்பது செரிமான செயல்­முறையையும் பாதிக்கும். உடலில் இருந்து எரிக்கப்படும் கலோரிகளின் அளவும் குறைந்து­விடும். மேலும் இரவு உணவை தவிர்ப்பது பசியை தூண்டிவிடும். நள்ளிரவில் பசி உணர்வுடன் அவதிப்பட நேரிடும். அப்படி பசியை புறக்­கணிப்பது உடல் நலனை பாதிப்படைய செய்து­விடும். இரவு உணவை அதிகம் சாப்­பிடு­வதும் நல்லதல்ல. மாலை வேளையில் நீர்ச் சத்து நிறைந்த பழங்களை சாப்­பிடலாம். அது இர­வில் சாப்பிடும் உணவின் அளவை குறைத்துக்­ கொள்ள வழி வகுக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன சத்திர...

2025-07-09 17:51:11
news-image

ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகள் என்ன?

2025-07-07 16:51:22
news-image

கட்டுப்படாத குருதி அழுத்தப் பாதிப்பிற்கான நவீன...

2025-07-05 17:18:51
news-image

ஆட்டிச பாதிப்பை ஏற்படுத்தும் ஃப்ரஜைல் எக்ஸ்...

2025-07-04 20:54:50
news-image

கிளியோமா எனும் மூளை நரம்பு புற்றுநோய்...

2025-07-03 16:23:57
news-image

முதுகு தண்டுவட வலி பாதிப்பை சீரமைக்கும்...

2025-07-02 17:44:27
news-image

பிரிஃபார்மிஸ் சிண்ட்ரோம் பாதிப்பும் நவீன சிகிச்சையும்

2025-07-01 17:29:07
news-image

சிறுநீரக நீர்க்கட்டி பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-06-30 18:38:05
news-image

ஆரம்ப நிலை சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை...

2025-06-27 18:08:50
news-image

செர்விகல் மைலோபதி எனும் முதுகெலும்பில் ஏற்படும்...

2025-06-26 17:34:32
news-image

புராஸ்டேட் புற்றுநோயிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-06-25 17:16:50
news-image

'ஸ்லிப் டிஸ்க் சயாடிகா' எனும் கால்...

2025-06-23 13:06:56