அவல் மிக்சர்

Published By: Devika

13 Sep, 2022 | 12:17 PM
image

தேவையான பொருட்கள்

அவல் - 1 கப்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

நிலக்கடலை - 1 பிடி

கடலை பருப்பு - 1 பிடி

உடைத்த கடலை - 1 பிடி

எண்ணெய் - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான­தும் நிலக்கடலை சேர்த்து வறுக்கவும். பின்பு அதே எண்ணெயில் கடலை பருப்பு, உடைத்த கடலை, கறிவேப்பிலை ஆகிய­வற்றை தனித்தனியே வறுக்கவும்.

அனைத்தையும் டிஷு பேப்பரில் போட்டு ஆற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு கொதித்ததும் அவல் சேர்த்து பொரித்து எடுக்கவும். நன்கு பரத்தி விட்டு ஆற விடவும். இல்லையெனில் நமுத்து விடும்.

நன்கு சூடு ஆறியவுடன் காற்று புகாத பாத்திரத்தில் அவல், வறுத்த பருப்பு, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.

எளிமையான அவல் மிக்சர் தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right