மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை சம்பந்தப்பட்ட பிரிவு ஏற்றுக்கொள்ள வேண்டும் - கெஹலிய

Published By: Digital Desk 3

13 Sep, 2022 | 09:46 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

மருந்துப் பொருட்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை சுகாதார துறையின் குறித்த பிரிவு ஏற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் நேற்று இடம்பெற்ற சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் சுகாதார அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கும்போது மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் உயிர் ஏனைய அனைத்து விடயங்களையும் விட பெறுமதியானதாகும். அதனால் சம்பிரதாய சட்டங்களை இலகுபடுத்தி அவர்களுக்கு தேவையான மருந்து பொருட்களை விநியோகிப்பதற்கு தேவையான அனைத்து செயற்பாடுகளையும் விரைவாக மேற்கொள்ளவேண்டும். 

மருந்துப் பொருட்களுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை சுகாதார துறையின் குறித்த பிரிவு ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அத்துடன் மக்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இல்லாமல் பெற்றுக்கொடுக்கும்போது மருத்துவ விநியோகப்பிரிவு தேவையான தகவல்களை முறையாக புதுப்பித்து, எந்த தட்டுப்பாடும் இல்லாமல் மக்களுக்கு தேவையான மருந்துப்பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கும் பூரண பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும். அதற்காக ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்தியில் சிறந்த தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் மருந்துப்பொருட்களை பெற்றுக்கொள்ளும்போது சர்வதேச மட்டத்தில் பெற்றுத்தரப்படும் கடன் அல்லது நன்கொடைகளை முறையாக செலுத்துவது தொடர்பில் அதிகாரிகள் முன்னுரிமை அடிப்படையில் கவனம் செலுத்தவேண்டும். 

இவ்வாறான வேலைத்திட்டங்களில் ஏற்படும் மந்த கதியிலான நடவடிக்கை,பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாகலாம். அத்துடன் நோயாளர்களுக்கான தேவையான மருந்து முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்துகொள்வதற்கும் அவற்றை முறையாக பங்கிடுவதற்காக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53