நீளமான நகங்களுக்கு...

By Devika

13 Sep, 2022 | 12:07 PM
image

பெரும்பாலான பெண்கள் நீண்ட, வலு­­வான நகங்கள் தங்கள் கைகளை அலங்க­ரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி நகங்­கள் வளர்க்க ஆசைப்பட்டாலும் அது சாத்­திய­மாவ­தில்லை. 

ஆசை ஆசையாய் வளர்க்கும் நகங்கள் சில நாட்களிலோ, சில வாரங்களிலோ உடைந்து­போய்விடுவதை பார்த்து வேதனை அடைப­வர்கள் நிறைய பேர் இருக்கி­றார்கள். உடலில் நீர்ச்சத்தை தக்க­வைப்பது சருமத்திற்கும், கூந்தலுக்கும் மட்டுமல்ல நகங்களின் வளர்ச்சிக்கும் உதவும். 

இளநீர், பழ ஜூஸ்கள் உள்ளிட்ட திரவ உணவுகளை உட்கொள்ளலாம். உட­லில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைக்க முடியாத சூழலில் நகங்­­களுக்கு ஈரப்பதமூட்டும் க்ரீம்களை உப­­யோகிக்க­லாம். நகங்கள் எளிதில் உடை­­யக்­கூடிய வகையில் பலவீனமாக இருந்­தால் புரதம் உட்கொள்வதை அதிகரிக்க வேண்டி­யிருக்கும். 

நீண்ட மற்றும் வலிமையான நகங்களை பெறுவதற்கு போதுமான அளவு புரதச்சத்துள்ள உணவை உட்­கொள்­வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

காலை உணவில் முட்டை மற்றும் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம். நகங்களின் அடி விளிம்பு பகுதியில் அமைந்துள்ள தோல் அடுக்கான கியூடிக்கிள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமானது. ஆணி படுக்கை என்று அழைக்கப்படும் இது நகங்க­ளின் வேர் பகுதியில் இருந்து வளரும் புதிய நக அடுக்கை பக்டீரியாக்களிடம் இருந்து பாதுகாக்கும். கியூட்­டிக்கிள் பகுதியை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கு கியூட்­டிக்கிள் ஒயில் உபயோகிக்கலாம். அது நகம் உடைவதை தடுக்­கும். எனினும் இதனை அதிகம் உபயோகிக்­கக்கூடாது. 

நகங்களை வட்ட வடிவில் வளர்ப்பதே சிறப்பானது. மற்ற வடிவங்களுடன் ஒப்பிடுகையில் வட்ட வடிவ நகங்கள்தான் எளிதில் உடைந்து போகாது. மேலும் நகங்களை நீளமாக வளர்ப்பதற்கும் உதவியாக இருக்கும். ஒருவேளை உடையக்கூடிய நகங்களாக இருந்தால் அவற்றை அடிக்கடி வெட்டி ஒழுங்குபடுத்தி வரலாம். அப்படி வெட்டி ஒழுங்கமைப்பது நகங்கள் வலுவாக வளர்வதற்கு உதவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right