செரிமான உறுப்புகளின் செயல்திறனை கூட்டும் மிளகு

Published By: Devika

13 Sep, 2022 | 11:56 AM
image

செரிமான உறுப்புகளின் செயல்திறனை கூட்டும். நெஞ்சுச்சளி, நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்பு­­­களின் செயல்திறனைக் கூட்டுகிறது. ஆஸ்து­மா­வால் அவ­­திப்­­படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று உண்பது நல்லது.

இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்­சினைகளுக்கும், மிளகு நல்ல தீர்வாக அமைகிறது. 

மிளகில் இருக்கும் பெப்பரைன் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மேலும் மூளை நல்ல செயல்திறனை பெற்று வயதாகாமல் சுறுசுறுப்பாக செயல்பட உதவு­கின்றது. இதன் விளைவாக அல்சைமர், பார்கின்சன் நோய் மற்றும் முதுமை அடைதல் போன்றவை தடுக்கப்படுகிறது. மிளகுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளும்போது இரு­மல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்­கின்றது. 

பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சு சளி கட்டுதல் நீங்கும்.

மிளகு உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது வயிற்று தசைகளிலும், உடலில் உள்ள பிற பகுதிகளிலும் கொழுப்பு சேராமல், தடுக்க உதவுகிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பது குறைக்கப்பட்டு சீரான உடல் எடை பெற உதவுகிறது.

மிளகு, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகிறது. மேலும் சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கி, சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகளை போக்க உதவுகின்றது.

மலச் சிக்கல் மற்றும் வயிற்று போக்கு குணமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49
news-image

சிகெல்லா கேஸ்ட்ரோன்டிரிடிஸ் எனும் இரைப்பை குடல்...

2024-09-17 10:24:41
news-image

செப்சிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-09-14 16:45:08
news-image

பி சி ஓ டி பாதிப்பு...

2024-09-14 16:14:37
news-image

ஹெபடோசெல்லுலர் கார்சினோமா எனும் கல்லீரல் புற்றுநோய்...

2024-09-12 16:42:06
news-image

தசை வலியை கண்டறியும் பரிசோதனை -...

2024-09-11 17:22:29
news-image

ஒரு பக்க காது கேளாமைக்கான நவீன...

2024-09-10 15:44:35
news-image

மூளையின் ஏற்படும் கட்டியை அகற்றும் நவீன...

2024-09-09 16:00:44
news-image

ஹெமிபிலீஜியா பாதிப்புக்கான நவீன இயன்முறை சிகிச்சை

2024-09-06 14:33:15
news-image

வளர்ச்சியடைந்து வரும் மரபணு மருத்துவம்

2024-09-04 17:47:30
news-image

புற்றுநோய்க்கு முழுமையாக நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-09-03 15:08:20
news-image

மேல் சுவாச குழாய் தொற்று பாதிப்பிற்குரிய...

2024-09-02 20:27:20