(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கடந்த இரு தினங்களில் 5 வீடுகள் உடைக்கப்பட்டு பல இலச்சம் ரூபா பெறுமதியான 40 பவுண்கள் கொண்ட தங்க ஆபரணங்கள், பணம், மற்றும் கையடக்க தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக இன்று திங்கட்கிழமை (12) வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண்ஒடை பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு சிறுவர் பாடசாலை ஒன்றில் நிகழ்வுக்காக சென்று 9.45 மணியளவில் வீடு திரும்பியபோது பூட்டியிருந்த வீட்டின் யன்னல்கதவை உடைத்து உட்புகுந்து அங்கிருந்த 16 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.
அதேவேளை 10 ஆம் திகதி சனிக்கிழமை ஓட்டுமாவடியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து வீட்டிற்கு உட்புகுந்து அங்கிருந்த ஏ.ரி.எம். வங்கி அட்டையை திருடிக் கொண்டு சென்று குருநாகல் பகுதியில் அந்த வங்கி அட்டையை கொடுத்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து நாவலடி பிரதேசத்தில் பிரதேச சமுர்த்தி தலைவர் ஒருவரின் பூட்டியிருந்த வீட்டை உடைத்து அங்கிருந்த கையடக்க தொலைபேசி 32 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் இன்னொரு வீட்டின் கதலை உடைத்து அங்pருந்த கையடக்க தொலைபேசி பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது
இவ்வாறு வெள்ளிக்கிழமை தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை வரையில் இரு தினங்களில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது
இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM