மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பேர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு !!

By Vishnu

12 Sep, 2022 | 08:39 PM
image

(கனகராசா சரவணன்) 

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பெண்கள் உட்பட 10 பேரை கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மாவட்டத்தில் உள்ள சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், அரசியல்வாதிகள்,  ஒரு சில ஊடகவியலாளர்கள், பெண்கள், சழுக செயற்பாட்டாளர்கள் உட்பட 10 பேரை  முறைப்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்கு கடந்த வாரம் தொடக்கம் ஒவ்வொருவருக்கும் திகதி குறிப்பிட்டு  தமது காரியாலயத்துக்கு வருமாறு கடிதங்களை அவர்களது வீடுகளுக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சென்று கையளித்துள்ளனர்.

இந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  ஒவ்வொருவருக்கு திகதி குறிப்பிட்டு வழங்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் குறிப்பிட்ட திகதிகளில் கொழும்பிலுள்ள அவர்களது காரியாலயத்துக்கு சென்று வாக்குமூலம் வழங்கிவருவதாகவும் இது இவர்களுக்கு எதிரான முறைப்பாடுகளுக்கு வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைக்கப்பட்வர்கள் பலபேர் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரச செலவுகளை 6 வீதத்தால் குறைப்பதற்கான...

2023-02-02 15:27:21
news-image

விமல், டலஸ், பீரிஸ் அணியினருக்கு எதிராக...

2023-02-02 12:49:22
news-image

தேர்தல் செலவுகளுக்கு கட்டுப்பணம் பயன்படுத்தப்படுகிறதா ?...

2023-02-02 15:25:08
news-image

இலங்கை வருகிறார் நேபாள வெளிவிவகார அமைச்சர்

2023-02-02 15:42:37
news-image

காணாமல்போன வெல்லம்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் நிர்வாணத்துடன்...

2023-02-02 17:03:36
news-image

26 உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ்...

2023-02-02 16:23:13
news-image

கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களையும் பிளவுபடுத்தி...

2023-02-02 16:59:48
news-image

கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதியில்...

2023-02-02 16:57:03
news-image

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2023-02-02 15:34:04
news-image

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

2023-02-02 16:53:42
news-image

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்திற்கு உத்தரவாதங்களை...

2023-02-02 15:56:36
news-image

கடவுளிடமே மன்னிப்புக் கோரினேன்; கத்தோலிக்க தேவாலயத்திடம்...

2023-02-02 15:45:01