புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறதா கிரீன் டீ...?!

Published By: Vishnu

12 Sep, 2022 | 02:24 PM
image

எம்மில் பலரும் நாளாந்தம் அல்லது வாரத்திற்கு ஒரு முறையேனும் கிரீன் டீ எனப்படும் தேநீரை அருந்துவது ஆரோக்கியமானது என அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்த கிரீன் டீயுடன் துளசியை இணைத்து பருகுவதால், ஏராளமான நன்மை கிடைக்கும் என உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கிரீன் டீயுடன் துளசியை இணைத்து அருந்துவதால் சளி, இருமல், காய்ச்சல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. உடலின் எடை குறைகிறது. எம்முடைய உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கிரீன் டீயில் இடம்பெற்றிருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான ஊட்டச்சத்துகளை பெற்றிருக்கின்றன.

மேலும் துளசியுடனான கிரீன் டீயை பருகுவதால் எம்முடைய நினைவாற்றல் மேம்படுகிறது. அத்துடன் புற்றுநோய் தொடர்பான அபாயத்தையும் குறைக்கிறது. குறிப்பாக செரிமான மண்டலத்தில் உண்டாகும் புற்றுநோய் பாதிப்பு 17 சதவீதம் குறைவதாக அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் சிலர் இதனை தொடர்ந்து பருகி வந்தால், அவர்களின் தொப்பையின் அளவு 35 சதவீதம் வரை குறைவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதன் போது துளசியுடனான கிரீன் டீயை அருந்துவதுடன் ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும். மேலும் இந்த துளசியுடனான கிரீன் டீயை அருந்துவதால் மூளையின் ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படுகிறது. ஏனெனில் இதில் உள்ள பாலிஃபீனால் நரம்புகளுக்கு ஊட்டமளிக்கிறது.

இத்தனை நன்மையை பயப்பதால் நாமும் வாரத்திற்கு ஒரு முறையேனும் துளசி சேர்க்கப்பட்ட கிரீன் டீயை பருகத் தொடங்குவோம்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15