சாதனை படைத்த நடிகர் அதர்வாவின் 'ட்ரிக்கர்' பட முன்னோட்டம்

By Vishnu

12 Sep, 2022 | 01:24 PM
image

நடிகர் அதர்வா நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாக இருக்கும் 'ட்ரிக்கர்' படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. வெளியான இருபத்தினான்கு மணி தியாலத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', '100', 'கூர்கா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சாம் அண்டன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ட்ரிக்கர்'.

இதில் நடிகர் அதர்வா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். 

இவர்களுடன் நடிகர்கள் அருண் பாண்டியன், அழகம்பெருமாள், சின்னி ஜெயந்த், முனீஸ்காந்த், அன்புதாசன், நடிகைகள் சீதா, வினோதினி வைத்யநாதன், அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் திரில்லர் ஜேனரில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இயக்குநர் பி. எஸ். மித்திரன் வசனம் எழுதியிருக்கிறார்.

ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும், நடிகருமான ராகுல் வெளியிடும் இந்த ட்ரிக்கர் திரைப்படத்தை பிரமோத் பிலிம்ஸ் மற்றும் மிராக்கிள் மூவிஸ் எனும் பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரதீப் சக்கரவர்த்தி மற்றும் சுருதி நல்லப்பா ஆகியோர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த முன்னோட்டத்தில் நடிகர் அதர்வா சீருடையற்ற பொலிஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'ட்ரிக்கர்' திரைப்படத்தின் முன்னோட்டத்தில் வசனங்களும், எக்சன் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த திரைப்படம் இம்மாதம் 23ஆம் திகதி அன்று பட மாளிகையில் வெளியாகிறது என்பதால் அதர்வாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் வெளியீட்டு...

2022-09-26 22:23:03
news-image

சன்னி லியோன் நடிக்கும் 'ஓ மை...

2022-09-26 21:28:05
news-image

பொன்னியின் செல்வன் ; முக்கிய கதாபாத்திரங்கள்...

2022-09-26 16:40:20
news-image

பண மோசடி வழக்கு ; நடிகை...

2022-09-26 14:59:02
news-image

வேதிகா நடிக்கும் 'மஹால்' பட தொடக்க...

2022-09-25 13:08:17
news-image

மனச்சோர்வுக்கு மருந்தாகும் 'நித்தம் ஒரு வானம்'

2022-09-24 13:59:10
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட புதிய பாடல்...

2022-09-24 12:40:53
news-image

குழலி - விமர்சனம்

2022-09-23 16:37:54
news-image

அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின்...

2022-09-23 16:02:32
news-image

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்'

2022-09-23 11:21:04
news-image

தனுஷின் 'வாத்தி' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

2022-09-21 11:54:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-09-18 14:05:47