மே 9 வன்முறைகளுடன் தொடர்பு : மேலும் இருவர் கைது

Published By: Vishnu

12 Sep, 2022 | 01:21 PM
image

மே 9 வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் இருவர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த மே 9 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் பின்னர் நடைபெற்ற வன்முறைகளுடன்  தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சந்தேகநபர்கள் ஹொரனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஹொரனை மாநகர மேயர் வீட்டிற்கும், மற்றும் குருநாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குருநாகல் பிரதேச சபை தலைவர் வீடு மற்றும் அவரின்  கடை தொகுதிக்கு சேதம் விளைத்தமை தொடர்பில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 44 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் ஹொரனை மற்றும் தொரட்டியாவ பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் ஹொரனை மற்றும் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட வாழைப்பழத்தில் போதைப்பொருள்

2023-09-30 08:50:46
news-image

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி பதவி இராஜினாமா...

2023-09-30 08:54:35
news-image

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை...

2023-09-30 08:38:16
news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38