(எம்.எப்.எம்.பஸீர்)
மக்கள் போராட்டாத்தில் முன்னணி செயற்பாட்டாளராக திகழ்ந்த பிரபல நடிகை தமித்தா அபேரத்னவை , பிணையில் விடுவிக்க கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று ( 12) உத்தரவிட்டது.
எதிர்வரும் 14 ஆம் திகதி வரை தமித்தா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று திங்கட்கிழமை நகர்த்தல் பத்திரம் ஊடாக குறித்த வழக்கு மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது நடிகை தமித்தாவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையில், சட்டத்தரணிகளான தெஜித்த கோரலகே, உதார முகம்திரம்கே, திலின புஞ்சி ஹேவா, எரந்த யக்கந்தவல உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு மன்றில் ஆஜராகி பிணை கோரி வாதங்களை முன் வைத்தனர்.
அந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட கோட்டை நீதிவான் திலின கமகே, தமித்தாவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணசிகலில் செல்ல அனுமதித்தார். அத்துடன் அவரது வெளிநாட்டுப் பயணங்களை தடை செய்வதாகவும் அறிவித்தார்.
கடந்த 7 ஆம் திகதி கைது செய்யப்பட்ட நடிகை தமித்தா அபேரத்ன, 8 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் சட்ட விரோதமாக பிரவேசித்தமை, அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோத ஒன்றுகூடல்களில் பங்கேற்றமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் இதன்போது நீதிமன்றுக்கு தெரிவித்திருந்தனர்.
காலி முகத்திடல், பொது மக்கள் போராட்ட களத்தின் முன்னணி செயற்பாட்டாளராக செயற்பட்ட நடிகை தமித்தா, 7 ஆம் திகதி பத்தரமுல்லை - தியத்த உயனவில் அடக்கு முறைக்கு எதிராக நடாத்தப்பட்ட அமைதி சத்தியாகிரக போராட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தார்.
அதன் பின்னர் வீடு திரும்பும் போது வெலிக்கடை பொலிஸ் பிரிவில் - தியத உயனவுக்கு அருகே வைத்து கொழும்பு வடக்கு குற்றவிசாரணை பணியக அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டு, முகத்துவாரத்தில் உள்ள அப்பணியக அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அதன் பின்னர் அவர் கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு அவரிடம் மேலதிக விசாரணைகள் நடாத்தப்பட்டிருந்தன.
அதன் பின்னர் அவர் நீதிமன்ரில் ஆஜர்ச் செய்யப்பட்டிருந்தார். எனினும், கோட்டை நீதிமன்றம் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பில் கைதாகி பிணையிலிருக்கும் போது அதனை ஒத்த குற்றம் ஒன்றினை மீண்டும் புரிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிமன்றம், 8 ஆம் திகதி பிணை சட்டத்தின் 14 (3) ஆம் அத்தியாயத்தை சந்தேக நபர் மீறியுள்ளதாக கூறி அவரை எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தது.
நேற்று நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது, மன்ரில் வாதங்கலை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, கடந்த தவணையில் தனது சேவை பெறுநரை விளக்கமறியலில் வைக்க முன் வைக்கப்பட்ட காரணம் தவறானது என சுட்டிக்காட்டினார். அதனை ஏற்ற நீதிமன்றம் தமித்தாவுக்கு பிணையளித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM