(கனகராசா சரவணன்)
அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள நேருபுரத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் லோறியுடன் லொறி சாரதி தப்பி ஓடியுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
பொத்துவில் ஹிதாயாபுரத்தைச் சேர்ந்த 58 வயதுடைய அப்துல் காதர் முகமது அலாவூதீன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பொத்துவில் ஹிதாயாபுரத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி சம்பவதினமான நேற்று இரவு 7.20 மணியளவில் மோட்டர்சைக்கிளில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது அக்கரைப்பற்று பகுதியில் இருந்து பொத்துவிலை நோக்கி பிரயாணித்த லொறி நேரு புரத்தில் மோட்டர்சைக்குளுடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத் அங்கிருந்து லொறியை சாரதி நிறுத்தாமல் தப்பி ஓடியுள்ளார்.
இவ் விபத்தில் சம்பவததில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்றவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டு திருக்கோவில் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தீருக்கோவில் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM