தற்கொலை செய்யட்டும் உங்கள் எதிர்மறை எண்ணங்கள்

Published By: Vishnu

12 Sep, 2022 | 12:06 PM
image

பிரம்மியா சண்முகராஜா

கரு­வில் உரு­வாகும் பூமியின் களம் காணும் வரை எத்­தனை சவால்கள் நீர் குடத்தில் நீந்­தி­ய­படி மூச்­ச­டைத்து இடமே தெரி­யாமல் கடந்து போவ­தற்­கான பல சாத்­தி­யங்கள் இருந்தும் புதுப்­ப­டைப்பாய் பூமி காணும் மனிதன் அப்­பொ­ழுதே வெற்­றி­யாளன் ஆகி விடு­கின்றான். வாழ்­வூக்கம் அவனை தூண்­டிக்­கொண்டே இருக்கும்.

பிறப்­பி­லேயே தன் உயிர் காக்கும் ஆற்றல் குழந்­தை­க­ளிடம் காணப்­ப­டு­கின்­றது புதிய சூழலில் சூடு, குளிர் வேறு­பாடு கண்டு சினந்து, சிரித்து பசிக்கு அழுது பற்றி பிடித்து தன்­னைத்தான் காத்துக்கொள்ளும் ஆற்­றலை மர­பின்பால் கைப்­பற்றிக் கொள்­கின்றான் மனிதன். எடுத்து உண்ண, கழித்து சுத்தம் செய்ய, உடுத்து அலங்­க­ரிக்க எதற்­குமே துணை தேடும் குழந்தை பரா­யத்­தி­லேயே மனிதன் தனக்­கா­னதை அழுதே சாதித்து விடுவான். அப்­படி இருக்க உல­கத்தில் தனித்தும் துணிந்தும் தனக்­கென தான் வாழ்ந்து சம்­பா­தித்து சாதிக்கும் நிலைக்கு வந்­தபின் எதற்­காக சாவூக்கம் வேண்டும்?

சற்று சிந்­திக்க வேண்­டிய விடயம் வாழ வளர நல்­லதை பெறவே விரும்பும் மனித இனம் பகுத்­த­றிய விலங்கில் வேறு­பட்டிருந்தும் ஏன் படைப்­பாற்­றலை மறந்து தன்­னைத்தான் மாய்த்­துக்­கொள்ள மார­டித்துக் கொள்­கின்­றது. மனித மனங்­களில் புரி­யப்­ப­டாத புதினம் தான் என்ன? ஏன் தற்­கொலை எண்ணம்? எதற்­காக தற்­கொலை முயற்சி? எத்­த­னையோ தற்­கொலை மர­ணங்கள். இவை­யெல்லாம் ஒருவன் விரும்பி ஏற்­ப­தில்லை. விடை இதுவே என்று எண்ணி பல வினாக்­களை விதைத்து விட்டு வீணாக தனக்­குத்­தானே விடை பெற்றுக்கொள்­கின்றான்.

நாம் நினைக்­கின்றோம் தற்­கொலை என்­பது மனிதன் ஒருவன் விஷம் கொண்டோ, கயிறு மாட்டி தூக்கில் தொங்­கியோ, புகை­யி­ர­தத்தில் பாய்ந்து புத்­தி­சா­லித்­தனம் காட்­டியோ, இன்னும் பல மருந்­துகள் கொண்டோ சில நொடி­களில் தன்­னைத்தான் மாய்த்துக் கொள்­வது என்று. உண்­மைதான் இத்­தனை நுட்­ப­மான மரணத் தேடல்­களை கண்டுகொண்டு பலரை கண்­ணீரில் பய­ணிக்க தூண்டும் காரி­யத்தை ஏன் செய்ய வேண்டும்.

வாழ்க்­கையில் குழப்­பங்­களா? எதிர்­பார்ப்­புகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லையா? தொடர் தோல்­வி­களா? நம்­பிக்கை துரோ­கங்­களா? இன்னும் முயற்­சிக்­கவே முடி­யாத அள­வுக்கு அன்பு முறி­வு­களா? இல்லை இழப்­பு­களா? இல்லை எதி­ரி­களின் சதி சூது­களா? இன்னும் ஒரு­வரின் தூண்­டல்­களா? எல்­லாமே ஒன்று கூடி உங்­க­ளுக்கே உரி­மை­யா­ன­தாக மாற்­றப்­பட்­ட­னவா? இப்­படி அடுக்கி வரி­சை­யி­டப்­பட்ட சவால்­களை பிரச்­சி­னை­யாக பார்த்து பார்த்து ஓடி ஒழிந்து விடு­கின்­றோம்.

முகம் கொடுத்து உடைத்து விட முயற்­சிப்­ப­தில்லை. ஒன்று ஒன்­றாக கூட்டி ஒன்று சேர்த்து நமது வாழ்வை ஒன்­றுமே இல்­லாமல் செய்து விடு­கி­றது நம் எதிர்­மறை எண்­ணங்கள். மனி­தர்­களின் இலகு தொழில் எப்­பொ­ழுதும் இன்னும் ஒரு­வரை சாட்டி விட்டு தப்­பித்துக்கொள்ள நினைப்­பது. தன்­ன­கத்து கார­ணங்­களை ஆராய்­வதில் தவிர்த்துக் கொள்­வ­துதான்.

எமக்கு ஏற்­படும் நெருக்­கீ­டுகள், தடைகள் மத்­தியில் நாம் நம்மை ஆற்­றுப்­ப­டுத்­திக்­கொள்ள ஆயத்­தப்­ப­டுத்­து­வது இல்லை, மாறாக நாம் மற்­ற­வர்கள் அப்­படி செய்­த­தால்; மற்­ற­வர்கள் இப்­படி செய்­ததால் நான் துன்­பப்­ப­டு­கின்றேன் என்று பழி சொல்­லி­விட்டு நமது வாழ்வின் சவால்­க­ளுக்கு வழி தேடு­வதில் தவறு செய்து விடு­கின்றோம். நாம் வாழ்ந்து நம்மை நிரூ­பிப்­ப­தற்கு பதில் நம்மை நாம் தற்­கொலை செய்து மற்­றவர் கருத்­துக்­க­ளுக்கு நிஜமென்று வலுச் சேர்க்­கின்றோம்.

கோபம், எரிச்சல், பகை­ உ­ணர்வு மற்­ற­வர்­களை தண்­டிக்கத் துண்டும் வார்த்தை பயன்­பா­டுகள், இன்னும் கூறினால் கைக­லப்­புகள், குரோ­தங்கள் போன்ற எதிர்­மறை உணர்­வு­களால் மனிதன் தன்­னைத்தான் அழித்துக் கொண்­டி­ருக்­கின்றான். மரணம் என்­பது உயி­ருக்கு திடீ­ரென ஏற்­ப­டு­கின்­றது மட்­டுமா ஒருவன் வாழ்­வி­யலில் நெறி­பி­றழ்ந்து பிற­ருக்கும் தனக்கும் தீங்­கா­னதை விதைத்துக் கொண்டிருக்கும் ஒவ்­வொரு விநா­டியும் அவன் மர­ணித்துக்கொண்டே தான் இருக்­கின்றான்.

தன்­னையும் தனது ஆற்­றல்­க­ளையும் எதிர்­மறை சக்தி சிந்­த­னை­களால் சிதைத்துக்கொண்டே தான் இருக்­கின்றான். இந்த நொடிகள் மனிதன் தன்னைக் கொல்லும் முயற்­சி­களை தன்னை அறி­யா­ம­லேயே எடுத்துக் கொள்­கின்றான். எங்­கெல்லாம் மனிதன் தனது உடல் சுத்தம் சுகா­தா­ரத்தை மறக்­கின்­றானோ? எங்­கெல்லாம் மனிதன் உடல் பேண உணவு உண்ண போஷணை ஊட்டம் பெற தவ­று­கின்­றானோ, இன்னும் எங்­கெல்லாம் மனிதன் புகைத்தல், மது அருந்­துதல், போதை பழக்­கங்­க­ளுக்கு தன்னை அடி­மை­யாக்கி விட்டு மயங்கி கிடக்­கின்­றானோ? அங்­கெல்லாம் அவன் தன்னை தற்­கொலை செய்து கொள்ளும்படி ­மு­றை­யி­லான செயல்­க­ளையே நகர்த்திச் செல்­கின்றான் என்­பதே உண்மை.

ஒரு சில நொடி­க­ளில் ­தன்னை மாய்த்­துக்­கொள்ள தைரியம் இல்­லாதோர்  மறை­மு­க­மாக தன்­னைத்தான் கொலை செய்ய படி­மு­றை­களை வகுத்து பணி செய்­கின்­றனர் என்றே தான் கூற வேண்டும். அது மட்­டுமா சிலர் வாழ்நாள் முழு­வ­த­னையும் தூங்கி துறந்து விடு­கின்­றனர். நேரத்தை விற்­று­விட்டு ஏற்ற நேரத்தில் நிம்­மதி இல்லை எனக்கு என்று தனி­மையில் தற்­கொ­லைக்கு தயா­ரா­கின்­றனர்.

மனி­தர்­களே காலம் துரி­த­மா­னது. உங்­களைப் பார்த்துக்கொண்டு அது நின்றுகொண்­டி­ருக்க நேரத்­திற்கு நேர­மில்லை. அது ஓடிய பாதையில் உன்னை அர்ப்­ப­ணிக்க நீ ஆயத்­த­மாக வேண்டும். எதிர்­மறை எண்­ணங்­க­ளுக்கு உங்­களைக் கொடுத்து விடா­தீர்கள். மற்­ற­வர்­களும், சூழ்­நி­லையும் உங்­களை ஒரு­போதும் அழித்­து­விட முடி­யாது.

நீங்கள் உங்­களை பகு­தி­யாக தற்­கொ­லைக்கு தயார் ­செய்­வதில் அதிக ஆர்வம் காட்­டு­வது உங்கள் எதிர்­மறை எண்­ணங்­க­ளேதான் என்­பதில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. உம்மை சுற்­றி­யுள்ள சமு­தாயம் நமது எண்­ணங்­களை, விருப்­பங்­களை புரிந்து நடக்கும் என்று எதிர்­பார்ப்­ப­திலும்விட புரி­த­லுடன் நாம் எமது விருப்­புக்­களை சந்­திக்க போராட புதிய எண்­ணங்­களை நேர்­ம­றை­யாக உரு­வாக்­கிக்­கொள்ள வேண்டும்.

மற்­ற­வர்கள் உங்கள் அன்­றாட நடத்­தை­களை இடை­நி­றுத்த ஏன் அனு­ம­திக்­கின்­றீர்கள்? உங்கள் மனம் இறுகி அழுத்­த­மாகி நெருக்­கப்­பட்டு உங்கள் வாழ்வை நீங்­களே வெறுத்து விடும் அள­வுக்கு மற்­ற­வர்கள் செயற்­பட நீங்கள் ஏன் அனு­ம­திக்க வேண்டும்? உங்கள் உணவை நீங்கள் உண்­பதை தவிர்க்க எப்­படி மற்­ற­வர்கள் கார­ண­மா­கலாம்? உங்கள் உறக்­கத்தை மற்­றவர் எப்­படி கெடுக்க முடியும்? நண்­பர்­களே! உற­வு­களே! உணர்ந்துகொள்­ளுங்கள்.

உங்­களை கையாள உங்­க­ளுக்கு மட்­டுமே முடியும். மற்­ற­வர்கள் உங்கள் வாழ்­வையோ? மர­ணத்­தையோ? தீர்­மா­னிப்­ப­தற்கு நீங்கள் அனு­ம­திக்­காத வரையில் உங்கள் பரம்­பரை கடத்­தல்கள் கூட உங்­களை பாதிக்க முடி­யாது. அவற்றை சூழ்­நிலை கொண்டு சரி செய்து விட முடியும்.

சற்று சிந்­தி­யுங்கள்! ஆன்­மீ­கங்கள் அனைத்தும் இத­யத்தின் நினைவு போல நீளும் என்­கின்­றது. எண்­ணங்­களை முதலில் சரி செய்ய கற்றுக் கொள்வோம். விரும்­பி­யதைப் பெற்று வாழ ஆசைப்­படும் நாம் நம் கவ­னத்தை நம்மை சுற்­றி­யுள்ள மற்­ற­வர்கள் என்ற விட­யத்தில் செலுத்­து­வ­தனை போன்று உண­விலும் உள, ஆளுமை ஆரோக்­கி­யத்­திலும் காட்ட வேண்­டி­யுள்­ளது.

இறைவன் எம்மை தனித்­து­வ­மாக படைத்­துள்ளார் என்­ப­தற்கு நம் கட்­டை­விரல் ரேகை­களே சான்று. உன் கை விரல் படிந்த ரேகை மடிப்­புகள் இன்னும் ஒரு­வ­ருக்கு இல்லை. ஏன் இத்­தனை தத்­து­வமாய் தனித்­து­வமாய் நீ படைக்­கப்­பட்டும் உன்னை புரிந்து உன் வாழ்­வூக்­கத்தில் வளம் சேர்க்க முயற்­சிப்­பதில் ஆர்வம் காட்ட முடி­யாது எதற்­காக தற்­கொலை எண்ணம்? மனிதா பிறப்­புக்கும் இறப்­புக்கும் இருக்கும் இடை­வெ­ளியில் ஒற்றை வாழ்வு தான் உனக்கும் எனக்கும்.

எண்­ணங்­களை சரிசெய் அவை உன்னை சாத­னை­யா­ள­னாக்கும். எண்­ணமே வாழ்­வா­கின்­றது. பகுதி பகு­தியாய் உன்னை தற்­கொ­லைக்கு தயார் செய்யும் பழக்­கங்­க­ளுக்கு விடை கொடு. விரைவாய் விழித்துக் கொள். உலகை கைக்குள் சுருக்கி விந்­தை­செய்த மனி­த­சா­தனை கட­வு­ளுக்கு சவால்­விடும் சாது­ரி­யங்கள் விஞ்­ஞானம் கடந்து உனக்கே உரி­ய­வை­யடா. ஒரு­போதும் துணிந்து விடாதே உன்னை கொன்று விட.

நாம் தற்­கொலை எண்ணம் கொண்­ட­வர்­களை எப்­படி அறி­வது, உத­வு­வது என அறிந்­தி­ருப்போம். அவர்கள் தமது வாழ்வின் அவ­சி­யத்தைப் புரிந்தும் அதனை வாழ முடி­யாது தன் வாழ்வின் சவால்­க­ளுக்கு முகம்­கொ­டுக்க சாவு ஒன்றே வழி­யென்று எண்ணி துணி­கின்­றார்கள். என்­றுதான் கதை. ஆனால் தற்­கொலை செய்­ப­வர்கள் ஒரு­வரும் விரும்பி துணி­வ­தில்லை வேறு வழி இல்லை என்று முனை­கின்­றனர். யாரேனும் அறிந்து தடுத்து விட்டால் தப்­பித்துக் கொள்வர்.

அநேகர் இந்தப் பாணி­யினர். பலர் தாம் விரும்­பி­ய­தனை பெற தற்­கொலை மிரட்டல் செய்து மற்­ற­வரை ஏமாற்ற எண்ணி தன்­னைத்தான் இழந்து போன­வர்கள். இன்னும் சிலர் தான் குழப்­பத்தில் உள்ளேன் இனி உத­வு­பவர் யாரென தேடி அறியும் நோக்கில் தமது தோல்­வி­களின் சார்பில் எதிர்­மறை எண்­ணத்தில் மூழ்­கி­யதால் தன்னை தற்­கொ­லைக்கு தயார்­செய்யும் போது யாரேனும் அறிந்து உத­வட்டும் என்­பதாய் தாம் தம்மை கொலை செய்யும் எண்­ணத்தை ஜாடையாய், குறி­யீடாய், வார்த்­தையாய் வெளிப்­ப­டுத்­து­பவர்.

நேர­டி­யாக நல்ல நண்­ப­னு­டனும் நேர்­ உ­ணர்­வா­ளி­க­ளி­டமும் தன்னை ஆற்­றுப்­ப­டுத்­து­ப­வ­ரை­விட ஏனை­யவர் தாம் வெளிப்­பா­டு­களை எத்­த­னித்தும் அறி­யப்­ப­டுத்­தியும் அடுத்­தவர் கவ­னிக்க தவறின் அவர்கள் நொடிப்­பொ­ழுது முடிவு தன்னை அழிப்­ப­திலும் மற்­ற­வரை சோகத்தில் ஆழ்த்­து­வ­தி­லுமே நிறை­வ­டை­கின்­றது.

நண்­பர்­களே ஒன்று தெரி­கின்­றதா? தற்­கொலை தீர்வு அல்ல அது பழி. குற்றம். கடவுள் உங்கள் மர­ணத்தை ஏற்­ப­தில்லை. நீங்கள் வாழும்­போது என்ன தவறு செய்த போதும் இறப்பில் உங்­க­ளுக்­கான நேச­கண்­ணீரும் பாராட்டு மடல்­களும் உண்டு. தற்­கொலை செய்து கொண்டால்  நீங்கள் எந்த மற்­றவர் பற்றி கவலை கொண்டு இந்த தீர்­மா­னத்தை எடுத்­தீர்­களோ அந்த மற்­ற­வர்­களின் பரி­கா­ச வார்த்­தை­க­ளுக்கு உங்­களை அர்ப்­ப­ணித்துச் செல்­கி­றீர்கள் என்று நினைத்துக் கொள்­ளுங்கள்.

மரித்­தபின் உங்கள் உட­லுக்கும் மதிப்பு இல்லை. வெட்­டிக்­கொட்டி புதைத்­த­தையும் கிண்டி புழு பார்த்து தரம் குறைத்து விடும் உலகம். தய­வான விண்­ணப்பம் தவ­றியும் வேண்டாம் தற்­கொலை எண்ணம். வாழ்­வின் இரு புறங்­க­ளையும் சரி­வரக் கவ­னி­யுங்கள் இன்னும் ஒருவர் உங்கள் வெளிப்­பா­டு­களை, துக்க துய­ரங்­களை புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்­பார்க்­கா­தீர்கள். நீங்­களே உங்கள் எண்­ணங்­களை அடிப்­ப­டையில் சரி செய்து பண்­ப­டுத்­துங்கள்.

வாழ்வும் வசப்­படும். நீங்கள் அனு­ம­தி­யா­த­வரை யாரும் உங்­களை தூக்­கி­லிட முடி­யாது. நீங்கள் அனு­ம­தி­யா­த­வரை எந்த அவ­மா­னமும் எந்த இழப்­பு­களும் உங்கள் புலன் தாண்டி புத்­தி­தொட முடி­யாது. பகுத்­த­றி­யுங்கள். உங்­களை நேரா­ன வாழ்­வுக்கு ஊக்­கப்­ப­டுத்தும் விட­யங்­களை உள்­ளெ­டுத்து மற்­றதை அன்­னமாய் தவிர்த்து தரம் பிரிக்கக் கற்­றுக்­கொள்­ளுங்கள்.

யார் துணையும் புரி­தலும் எதிர்­பார்க்கத் தேவை­யில்லை. வாழ்வின் இன்­பங்­களைப் போல் துன்­பங்­க­ளையும் அணைக்க கற்­றுக்­கொள்­ளுங்கள். அவை உங்­களை உரு­வாக்கும் அனைத்தும் நன்­மைக்கே என்­பதாய் ஆரா­யுங்கள். உங்கள் அறிவில் உற்­றெ­டுக்கும் வாழ்­வூக்கும். எல்லாம் மாறும் எல்­லா­வற்­றிற்கும் பதில் உண்டு எல்லாம் சரி­யா­கி­விடும் காலத்­திடம் கைய­ளித்து காத்­தி­ருங்கள். அனு­ப­வித்தல் என்­பது துன்­பத்­திற்கும் பங்­கா­கட்டும்.

விதி­வி­லக்­காக ஒருவர் உள­நோ­யா­ள­ராக இருக்­கும்­போது (குறிப்­பாக மனச்­சோர்வு போன்­றவை) அவ­னது எண்ணம் அவன் வசம் இருப்­ப­தில்லை. இங்கு தற்­கொலை மர­ணங்கள் தவிர்க்க முடி­யா­தவை. உற­வு­களே இவர்­களை கண்­கா­ணித்து உத­வுங்கள். மனித அங்கி தனித்து வாழ முடி­யாது தனிமை தவி­ருங்கள்.

உற­வு­க­ளுக்கும் ஒதுக்­குங்கள் உங்கள் நேரத்தை. விஞ்­ஞா­னத்தின் விந்­தை­க­ளுக்கு விற்றுப்போட்ட மனிதாபிமானங்களை சற்று திருப்பிப் பெற்றுக்கொள்ளுங்கள். போட்டி உலகில் தோல்விகளிடம் அடமானம் வைத்த நம் அற்புத மனதை மீட்டுக்கொள்ளுங்கள். வாழத்துணியுங்கள். ஓய்வும், உறக்கமும் தவிர்க்காது தேவைக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.

இப்படி செய்தால் உறவுகளே உங்கள் மூளை ஒருபோதும் உங்களை நிரந்தரமாய் ஓய்வெடுக்கவோ, நிரந்தரமாய் உறங்கி விடவோ நிச்சயமாய் அனுமதிப்பதில்லை. நம்மை நாம் நிதானித்து வாழ்வைப் புரிந்து வாழ வளம் சேர்ப்போம். நம்மை விட நம்மை நேசிக்க இறைவன் போல் அனைவரும் கூடி வர நம்மை நாம் உயர்ந்த எண்ணங்களுடன் நிமிர்ந்து பார்க்க வேண்டும்.வாழ்ந்து தான் பார்ப்போமே!! என்று துணியுங்கள்.

தினம் தினம் உங்களை தயார் செய்யுங்கள். குற்ற உணர்வுகள் வேண்டாம். உங்களை கல்லெறிய சுற்றவாளிகள் ஒருவரும் உலகில் இல்லை. உனக்காக நீ வாழ் உன்னோடு உள்ளவர்களையும் வாழ வைப்பாய், நீ உன்னைக் கொன்று அல்ல உன்னைக் கொண்டு வாழ்ந்துவிடு.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04