51 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் ! இலங்கை குறித்தும் விவாதம் !

Published By: Priyatharshan

06 Oct, 2022 | 06:01 PM
image

இலங்கை குறித்து இணையனுசரணை நாடுகளால் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஆரம்பம் !

இலங்கை குறித்த புதிய பிரேரணை ஜெனிவாவில் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை குறித்த புதிய பிரேரணைக்கு ஆதரவாக 20 நாடுகள் வாக்களித்துள்ளன. பிரேரணைக்கு எதிராக 7 நாடுகள் வாக்களித்துள்ளன.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பில் 20 நாடுகள் கலந்துகொள்ளவில்லை.

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று 06 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில், இலங்கை குறித்த புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது.

கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார்.

இலங்கை அரசாங்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி  ஜெனிவா சென்றுள்ள தூதுக்குழுவின் தலைவர் அலிசப்ரி மனித உரிமைப் பேரவையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் உரையாற்றவிருக்கிறார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 17 பக்க எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் 

https://cdn.virakesari.lk/uploads/medium/file/188707/Press-Release-Sri-Lanka-2022-09-Tamil.pdf

 • நாடுகளை அடிப்படையாக கொண்ட பொறிமுறைகளை ஆதரிக்கவில்லை என  பெலாரஸ் தெரிவிப்பு 

 • அரசியல்நோக்கங்களை அடிப்படையாக கொண்ட தீர்மானங்கள்  உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுபவை என அந்த நாடு தெரிவித்துள்ளது.

 • நாடுகளை அடிப்படையாக கொண்ட தீர்மானங்கள் ஐ.நா. சாசனத்தின் அடிப்படையை மீறுபவையென புரூண்டி தெரிவித்துள்ளது.

 • கடந்த தீர்மானம்  குறிப்பிட்ட நாட்டின் ஆதரவுடன் நிறைவேற்றப்படாததால் அது பயனுள்ளதாக அமையவில்லை என சிம்பாப்வே தெரிவித்துள்ளது.

 • மனித உரிமைகளிற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதாக தெரிவித்துள்ள வியட்நாம் இழப்பீடு மற்றும் நிலங்கை விடுவிப்பது குறித்த இலங்கையின் தேசிய முயற்சிகளை அங்கீகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 • இலங்கையில் காணப்படும் மனித உரிமை நிலவரத்தை பெரிது படுத்தும் எண்ணமில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

 • ஐக்கியநாடுகள் மனித உரிமைகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளுடன் இலங்கை தன்னை இணைத்துக்கொள்வது அவசியம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 • முக்கியமான நடவடிக்கையாக இலங்கை  நீண்டகாலமாக காணப்படும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஊழல் ஆகியவற்றிற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

 • இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடி குறித்து கனடா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

 • ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அண்மைய தாக்குதல்கள் இலங்கையில் தொடர்ந்து நிலவும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கும் பத்திரிகையாளர்கள், சிவில் சமூகத்தினர் துன்புறுத்தப்படும் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றது என கனடா தெரிவித்துள்ளது.

 • அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரான இலங்கையின் அணுகுமுறை கடினமாவது குறித்து நியுசிலாந்து கவலை தெரிவித்துள்ளது.

 • பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகளை சுட்டிக்காட்டியுள்ள நியுசிலாந்து சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்திவைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 • இலங்கைக்கு தனது தளர்ச்சியற்ற ஆதரவை வெளியிட்டுள்ள பாகிஸ்தான், இலங்கை முன்னெடுத்துள்ள உள்நாட்டு முயற்சிகளை மனித உரிமை பேரவை அங்கீகரிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

 • இலங்கை தனது ஆணையை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்படவேண்டுமென துருக்கி தெரிவித்துள்ளது.

 • முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாட்டிலிருந்து வெளியேறிய பின்னர் இலங்கை ஜனநாயக ஒழுங்கை ஏற்படுத்தியுள்ளமைக்கு உகண்டா பாராட்டு தெரிவித்துள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------------------

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமை ஜனநாயக சீர்திருத்தங்களிற்கு வாய்ப்பில்லை - ஜெனீவாவில் நுவான் போபகே

மேலும் செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/135546

-----------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை குறித்து இந்தியா கடும் அதிருப்தி

மேலும் செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/135528

----------------------------------------------------------------------------------------------------------------------------

மக்களின் இறையாண்மைக்குப் புறம்பான தீர்மானத்தை ஏற்கோம் : ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அறிவித்தார் அலி சப்ரி

மேலும் செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/135527

----------------------------------------------------------------------------------------------------------------------

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மீள்பிரயோகம் தொடர்பில் கடும் அதிருப்தி : இலங்கைக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த சீனா, ரஷ்யா, மாலைதீவுகள்

மேலும் செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/135526

-----------------------------------------------------------------------------------------------------------------

வடக்கு, கிழக்கில் தொடரும் இராணுவமயமாக்கல் : இலங்கைக்கு எதிரான சர்வதேச பொறிமுறைகளுக்கு உறுப்புநாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் - மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்

 

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/135523

--------------------------------------------------------------------------------------------------------------------------

இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடுவார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது.

கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார்.

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/135478

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

உள்ளக பொறிமுறை குறித்து பச்லெட்டை தெளிவுபடுத்தவுள்ள  அரச தூதுக்குழு

காணாமல் போனோர்  அலு­வ­லகம்,  இழப்­பீட்டு அலு­வ­லகம் நல்­லி­ணக்க செயற்­பா­டு­களை  ஒருங்­கி­ணைக்கும்  செய­லகம்  என்­ப­ன­வற்றை இலங்கை முன்­னெ­டுத்து செல்­கின்­றது என்­பது குறித்தும் இலங்கைத் தூதுக்­கு­ழு­வினர் ஐ.நா. மனித. உரிமை ஆணை­யாளர்   பச்­லெட்­டிடம் எடுத்­துக்­கூ­ற­வி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/135481

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

பலப்பரீட்சை இன்று ! இணை அனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை : இலங்கைக்கு ஆதரவாக குறைவான வாக்குகளே கிடைக்குமாம்

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை மீதான வாக்கெடுப்பு 06 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவாவில் இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு (ஜெனிவா நேரப்படி 1.30 மணிக்கு) நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/137055

--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐ.நா.வின் புதிய பிரேரணையை ஏற்க மாட்டோம் : தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு முன்னுரிமை - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

பிரிட்டன், கனடா ஆகிய இருநாடுகளும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணையைக் கொண்டுவருவதில் முனைப்பாக செயற்பட்டிருப்பதுடன் அமெரிக்கா, ஜேர்மனி உள்ளிட்ட உலகின் பலம்பொருந்திய நாடுகள் தமது பொருளாதார வலு மற்றும் அதிகாரம் என்பவற்றைப் பயன்படுத்தி இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு ஏனைய பலமற்ற நாடுகள் மீது அழுத்தம் பிரயோகித்துவருகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/137049

------------------------------------------------------------------------------------------------------------------------------

புதிய பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் - இந்தியா உள்ளிட்ட உறுப்புநாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

சிறந்ததொரு மாற்றத்தையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்யுமாறு வலியுறுத்திவரும் இலங்கையர்களுக்கு உதவவேண்டுமானால், இந்தியாவும் ஏனைய உறுப்புநாடுகளும் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டியது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு  https://www.virakesari.lk/article/137068

--------------------------------------------------------------------------------------------------------------------------------

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விடியும் வேளையில் வரப்போகும் திருப்பங்கள்

2024-02-28 18:49:12
news-image

வடக்கு, கிழக்கில் சுதந்திரமான ஆலய வழிபாட்டுக்கும் ...

2024-02-28 18:04:16
news-image

பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் பத்து பேர்ச் காணி...

2024-02-28 13:52:19
news-image

பூமியின் நுரையீரலில் மிக பெரிய அனகொண்டா

2024-02-28 11:03:34
news-image

அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

2024-02-27 14:27:33
news-image

இலங்கையில் பெண் கைதிகள் சடுதியாக அதிகரிப்பு…!

2024-02-27 13:50:28
news-image

இனி என்னை அப்பா என்று யார்...

2024-02-27 12:10:48
news-image

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை மோசடிகளால் அழிகிறதா?

2024-02-27 16:00:41
news-image

ரஃபா எல்லைக் கடவையும் எகிப்து மற்றும்...

2024-02-26 16:15:11
news-image

அதிகாரத்துக்காக மக்கள் ஆணையைப் பறித்தல்

2024-02-26 15:48:00
news-image

ஆடி அடங்கிய பின் பிறக்கின்ற ஞானம் 

2024-02-26 15:36:27
news-image

விலகும் புதைகுழி மர்மம்

2024-02-26 15:15:32