51 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

Published By: Digital Desk 3

12 Sep, 2022 | 11:17 AM
image

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது.

கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார்.

இலங்கை அரசாங்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி  ஜெனிவா சென்றுள்ள தூதுக்குழுவின் தலைவர் அலிசப்ரி மனித உரிமைப் பேரவையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் உரையாற்றவிருக்கிறார்.

மனி­த­உ­ரிமை பேர­வையின் தலைவர் மற்றும்  மனித உரி­மை­யாளர் ஆணை­யாளர் தலை­மையில் இன்று  51 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­க­மா­க­வுள்­ளது. 

இதில் முத­லா­வ­தாக  உலக நாடு­களின்   மனி­த­உ­ரிமை நிலைமை தொடர்­பாக ஒரு நீண்ட அறிக்­கையை  ஆணை­யாளர் பச்­செலட் வெளி­யி­ட­வி­ருக்­கின்றார்.  

அதன் பின்னர்   இலங்கை தொடர்­பான அறிக்­கையை   ஆணை­யாளர்   வெளி­யி­டுவார். 

2021 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட  இலங்கை தொடர்­பான 46/1 என்ற பிரே­ரணை எவ்­வாறு   அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது  மற்றும் இலங்­கையின் மனி­த­உ­ரிமை நிலை­மைகள் என்ன? பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் அடுத்து என்ன செய்­யலாம் போன்ற விட­யங்கள் தொடர்­பா­கவே   ஆணை­யாளர் அறிக்­கையை  சமர்ப்­பிக்­க­வுள்ளார்.   

இந்த அறிக்கை  ஏற்­க­னவே வெளி­யா­கி­யுள்ள நிலையில் அதன் சாரம்­சத்தை   ஆணை­யாளர்  நாளை  வாசிக்­க­வி­ருக்­கிறார்.

அதன் பின்னர்  வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி   பேர­வையில் உரை­யாற்­ற­வி­ருக்­கின்றார். இதன்­போது  இலங்கை   நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் எவ்­வாறு செயற்­ப­டு­கின்­றது, பயங்­க­ர­வாத தடை சட்டம் எவ்­வாறு திருத்­தப்­படும்  என்­பன தொடர்­பா­கவும் அர­சாங்கம் உள்­ளக பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் பேர­வைியல் அலி­சப்ரி அறி­விக்­க­வி­ருக்­கின்றார்.

தொடர்ந்து  இலங்கை குறித்­த­வி­வாதம்  ஜெனிவா பேர­வையில் நடை­பெறும். இதில்   உறுப்பு நாடுகள் சர்­வ­தேச  மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் பலர் கலந்து கொண்டு  இலங்கை தொடர்­பாக   உரை­யாற்­ற­வி­ருக்­கின்­றனர்.

இம்­முறை இலங்­கையின் சார்பில் நீதி அமைச்சர்  விஜ­ய­தாச ராஜ­பக்ஷ  மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி  மற்றும்  இரண்டு அமைச்­சு­க­ளி­னதும் உய­ர­தி­கா­ரிகள்   ஜெனிவா கூட்டத் தொடரில் பங்­கேற்க சென்­றுள்­ள­துடன். அவர்கள் நேற்­று­முன்­தினம் ஜெனி­வாவில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் தலைவர் .

பெட்­ரிகோ விலி­கஸை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இதன்­போ­து­உள்­ள­கப்­பொ­றி­மு­றையை வலுப்­ப­டுத்­து­வதன் அவ­சியம் தொடர்பில் அவ­ரிடம் மீள­வ­லி­யு­றுத்­தி­யுள்­ள­து­.

இச்­சந்­திப்­பின்­போது மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் இலங்கை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் முயற்சிகள் மற்றும் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கு ஒன்றிணைதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22