தெற்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் : சந்தேக நபர்களுக்கு கடும் எச்சரிக்கை - பொலிஸார் விடுத்துள்ள சவால் ! 

Published By: Digital Desk 4

11 Sep, 2022 | 10:03 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தென் மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகளுடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் கண்டுவிட்டதாக தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.  

குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாட ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும், 6 வாரங்களுக்குள் அனைத்து சம்பவங்களுடனும் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து காட்டுவதாகவும், பொலிஸாரா குற்றவாளிகளா என ஒரு கை பார்த்து விடலாம் எனவும் அவர் சவால் விடுத்தார்.

 156 ஆவது பொலிஸ் தின நிகழ்வுகளாக காலி - கோட்டையில் நடந்த விஷேட கொண்டாட்ட நிகழ்வின் போதே  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

' கடந்த ஜூன் முதலாம்  திகதி முதல் தென் மாகாணத்தில் இதுவரை  துப்பாக்கிதாரிகளால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  இதில் 4 சம்பவங்கள் தொடர்பிலான  பூரண விசாரணை நிறைவு செய்யப்பட்டு சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதே போல் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கிகள், பிரவுனின் ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

ஏனைய சம்பவங்களின் சந்தேக நபர்களையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம்.  அந்த, சந்தேக நபர்கள், அந்த கொலைக்காரர்கள், ஆயுதத்தை கையிலெடுத்தவர்கள் , குற்றத்தின் பின்னர் மறைந்திருக்க அல்லது சுதந்திரமாக இருக்க முடியும் என நினைப்பார்களாயின், அதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை அவர்களுக்கு ஞாபகபப்டுத்த விரும்புகின்றேன்.

 இரு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் கீழ் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

எமக்கு வழங்கப்பட்டுள்ள சவாலை நாம் ஏற்கின்றோம். பார்க்கலாம் யார் சவாலில் ஜெயிக்கின்றார்ரகாள் என்று. நாமா அல்லது குற்றவாளிகளா என இன்னும் 6 வாரங்களில் விடை தெரிந்துவிடும். 

ஒரு போதும் ஆயுதங்களுடன் நடமாட நாம் அனுமதிக்கப் போவதில்லை.  அனைவரையும் அடையாளம் கண்டுள்ளோம்.  உதவியவர்கள், மறைமுகமாக உதவியவர்கள், எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்கலில் இருந்து அனைவரையும் கண்டுபிடித்துவிட்டோம்.' என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51