மே 9 வன்முறை : நடவடிக்கைகளை எடுக்கவில்லை - கோட்டா நியமித்த விசாரணை குழு ரணிலுக்கு அறிக்கை

Published By: Digital Desk 4

11 Sep, 2022 | 09:57 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

நாடெங்கும் கடந்த மே 9 ஆம் திகதி பதிவான வன்முறை சம்பவங்களை  தடுப்பதற்கு  முப்படையினரும் பொலிஸாரும் போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.  

குறிப்பாக குறித்த தினம் தாக்கி தீ வைக்கப்பட்ட 74 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மீது, அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறப்போவதாக உளவுத் துறையினர் தகவல் அளித்தும் அதனை தடுக்க  பொலிசாரும், முப்படையினரும் தவறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கீழ் நிலை பொலிஸ், முப்படையின் உறுப்பினர்களுக்கு மேல் நிலை அதிகாரிகள் உரிய கட்டளைகளை உரிய நேரத்தில் வழங்கவில்லை என இதன்போது தெரியவந்துள்ளது.

மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து மே 9 ஆம் திகதி வரை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் படைத்தளபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்த நிலையில், அந்த குழுவின் விசாரணை ஊடாக மேற்படி விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் குறித்த குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடைக்கால சுருக்க  அறிக்கையினை சமர்ப்பித்துள்ளதாக அறிய முடிகிறது.

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த ப்ளீட்  வசந்த கரன்னாகொட இந்த விசாரணை  குழுவிற்கு தலைமை தாங்கிய நிலையில்  முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் விமானப்படையின்  முன்னாள் தளபதி மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

 கடந்த மே 24 ஆம் திகதி இந்த குழு   அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதுடன், அக்குழு கடந்த ஏப்ரல் 31 மிரிஹானை சம்பவம் மற்றும் மே 9 நாடளாவிய ரீதியிலான வன்முறைகள் தொடர்பில் விஷேடமாக ஆராய்ந்துள்ளது.

 இதன்போது, முப்படை, பொலிஸார், உளவுத் துறை என சுமார் 30 பேரிடம் இந்த ஆணைக் குழு விஷேட விசாரணைகளை நடாத்தி சாட்சியம் பதிவு செய்துள்ளது.. அதன் அடிப்படையிலேயே, வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும், முப்படையினரும்  போதுமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலிருந்து பின் வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கியுள்ள இடைக்கால அறிக்கையில், இந்த விசாரணைக் குழுவானது  தான் பதிவு செய்த சாட்சியங்களின்படி, இந்த வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸ், முப்படை மற்றும்  புலனாய்வு அமைப்புகளின்  செயற்பாடுகலில்  மூன்று பாரிய குறைபாடுகளை  அவதானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அவற்றுள் முதன்மையானது, தேவை ஏற்படும் போது தடியடிப் பிரயோகம் செய்யும் தடிகளை பயன்படுத்துவதற்கும், வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடாத்தவும் , முழங்காலுக்குக் கீழே  சுடுவதற்கும் பாதுகாப்புப் படையினரிடமிருந்த தயக்கமாகும்.  இரண்டாவது, புலனாய்வு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமை எனவும் மூன்றாவது குறைபாடானது, பாதுகாப்புப் படையினருக்கு இடையேயான செயல்பாட்டு ஒருங்கிணைப்பு இல்லாதது எனவும் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அறிய முடடிகிறது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையிலும் அரசாங்கத்திற்கு எதிராக அவ்வப்போது எதிர்ப்புகள் எழுகின்ற நிலையில்,  இந்த மூன்று குறைப்பாடுகளையும் ஜனாதிபதியின்  உடனடி கவனத்திற்கு கொண்டு வருவதாக குறித்த விசாரணைக் குழு  இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு :...

2023-09-26 21:06:57
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11