69 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது - டலஸ்

Published By: T Yuwaraj

11 Sep, 2022 | 08:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு 69 இலட்ச மக்கள் வழங்கிய ஆணை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற மக்களாணை அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளமை மக்களாணைக்கு முற்றிலும் விரோதமானது என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

கண்டி –கடுகஸ்தொட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் பல்வேறு எதிர்பார்ப்பிற்கு மத்தியில் முறைமை மாற்றத்திற்காக 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும்,2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்கள்.நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு பல்வேறு காரணிகளினால் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு 69 இலட்ச மக்கள் வழங்கிய ஆணை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசார மேடைகளில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கி மோசடியாளராகவும்,நாட்டை காட்டி கொடுப்பவராகவும்,பொருளாதாரத்தை இல்லாதொழித்தவராகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்,ஆனால் தற்போது பொருளாதாரத்தை மேம்படுத்த அவரே இறுதி என குறிப்பிட்டுக்கொண்டு அவருக்கு எதிரான 69 இலட்ச மக்களாணை அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரையான காலத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் இனம்,மதம்,யுத்தம்,யுத்த வெற்றி ஆகியவற்றை தேர்தல் பிரசாரமாக விற்கு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளன.4 குடும்பங்கள் தொடர்ச்சியாக நாட்டை ஆட்சி செய்துள்ளன.குடும்ப ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக திறமையானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை.

பொதுஜன பெரமுனவின் ஒருசில சுய சிந்தனையற்ற உறுப்பினர்கள் எமது அரசியல் பயணம் பற்றி விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்.சிறந்த அரசியல் மாற்றத்திற்காகவே பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படுகிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18