ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது இலங்கை

By Vishnu

11 Sep, 2022 | 05:24 PM
image

(நெவில் அன்தனி)

சிங்கப்பூர் ஓ சி பி சி உள்ளக அரங்கில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 13ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் சிங்கப்பூரிடம் ஆரம்பத்தில் கடும் சவாலை எதிர்கொண்ட நடப்பு சம்பியன் இலங்கை 63 - 52 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.

இதன் மூலம் ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் வரலாற்றில் 6ஆவது தடவையாக இலங்கை ஆசிய சம்பியன் பட்டத்தை சூடி ஆசிய வலைபந்தாட்டத்தில் முடிசூடா இராணி என்பதை நிரூபித்தது.

இலங்கை அணி வீராங்கனைகள் அனைவரும் அற்புதமாக விளiயாடி இலங்கை தோல்வி அடையாத அணியாக  சம்பியனாவதற்கு பெரும் பங்களிப்பு செய்தனர்.

குறிப்பாக 43 வயதான தர்ஜினி சிவலிங்கம் தனது வயதையும் மீறி கோல் போடுவதில் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தி இறுதி ஆட்டம் உட்பட இலங்கையின் சகல வெற்றிகளிலும் பெரும் பங்காற்றியிருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இறுதி போட்டியின் முதலாவது கால் மணி ஆட்ட நேர பகுதியில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய சிங்கப்பூர் 19 - 13 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை அடைந்தது. அப் பகுதியில் இலங்கை அணயினர் இழைத்த தவறுகள் காரணமாக சிங்கப்பூர் கோல் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டது.

இரண்டாவது கால் மணி ஆட்ட நேர பகுதியில் இரண்டு அணியினருமே தவறுகளை இழைத்தாவாறு கோல்களைப் போட்டவண்ணம் இருந்தனர். ஓரளவு போட்டித் தன்மை நிலவிய அப் பகுதியை இலங்கை 14 - 11 எனற தனதாக்கிய போதிலும் இடைவேளையின்போது சிங்கப்பூர் 30 - 27 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் நடைபெற்ற 3ஆவது கால் மணி ஆட்ட நேர பகுதியின் ஒரு கட்டத்தில் கோல் நிலையை 34 - 34 என சமப்படுத்திய இலங்கை அதன் பின்னர் திறமையாக விளையாடி 3ஆவது ஆட்ட நேர பகுதியை 19 - 8 என தனதாக்கி ஒட்டுமொத்த கோல் நிலையை 46 - 38 என தனக்கு சாதகமாக்கிக்கொண்டு 8 கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது.

கடைசி கால் மணி ஆட்ட நேர பகுதியில் சிங்கப்பூர் வீராங்கனைகள் ஏகப்பட்ட தவறுகளை விட்டதன் காரணமாக இலங்கை அணி இரட்டை வாய்ப்புகளைப் பயன்படுத்தி கோல்களை சரளமாகப் போட்டு அப் பகுதியையும் 17 - 14 என தனதாக்கி ஒட்டு மொத்த நிலையில் 63 - 52 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிட்சர்லாந்துக்கு எதிராக இறுக்கமான வெற்றியை ஈட்டிய...

2022-11-29 06:23:21
news-image

தென் கொரியாவை வென்றது கானா

2022-11-28 21:06:20
news-image

ஓர் ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து...

2022-11-28 18:24:31
news-image

சேர்பியா - கெமறூன் போட்டி வெற்றிதோல்வியின்றி...

2022-11-28 18:06:08
news-image

உலகக் கிண்ண கிரிக்கெட் 2023 :...

2022-11-28 17:14:53
news-image

இலங்கை கிரிக்கெட்டின் 3 வீரர்கள் திருமண...

2022-11-28 16:56:51
news-image

ஜேர்மனிய முன்னாள் வீரரின் படத்துடன் வாய்...

2022-11-28 15:27:48
news-image

பிரேஸில், சுவிட்சர்லாந்து, போர்த்துக்கல், உருகுவே ஆகிய...

2022-11-28 13:56:49
news-image

அடுத்த 5 வருடங்களில் ஆப்கான் நடத்த...

2022-11-28 13:33:39
news-image

மில்ரோய் பெரேரா ஞாபகார்த்த கால்பந்தாட்டம் :...

2022-11-28 14:41:22
news-image

கால்பந்தாட்ட வீரர் மெஸியின் ஆட்டத்தை நேரில்...

2022-11-28 13:03:16
news-image

மொரோக்கோவிடம் பெல்ஜியமடைந்த தோல்வியின் எதிரொலி பிரஸெல்ஸில்...

2022-11-28 10:05:55