(இராஜதுரை ஹஷான்)
நிலையான அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
பொதுஜன பெரமுனவிற்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு உள்ளது. எதிர்வரும் காலங்களில் எத்தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயார் என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் 11 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண வேண்டும் என்பதற்காக பொதுஜன பெரமுன அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.
பாராளுமன்றில் பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை ஸ்தாபிக்க நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் கைதியாக சிறைப்பட்டுள்ளார் என எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்.
பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த போது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷவுக்கு ஆசை ஆனால் பயம் என்பதால் சவாலை ஏற்க அவர் முன்வரவில்லை.
நெருக்கடியான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்று தற்போது ஜனாதிபதியாகியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் பதவியை பொறுப்பேற்றிருந்தால் அவர் தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு வழங்கியிருப்போம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு,சமூக கட்டமைப்பில் தோற்றம்பெற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே எமது பிரதான வலியுறுத்தலாக அமைந்தது.
பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு எதிர்க்கட்சியினர் சர்வக்கட்சி அரசாங்கத்தில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நிலையான அரசாங்கம் அவசியம்.தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
நிலையான அமைச்சரவை நியமனத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.
பொதுஜன பெரமுன ஏனைய அரசியல் கட்சிகளை காட்டிலும் விட்டுக்கொடுப்பும் செயற்பட்டுள்ளது.பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி தற்போது தங்களின் எதிர்கால அரசியல் இருப்பிற்காக பொதுஜன பெரமுனவை விமர்சிப்பதை தங்களின்; அரசியல் செயற்பாடாக முன்னெடுத்துள்ளார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM