அவுஸ்திரோலியாவுக்கு சட்ட விரோதமாக செல்லமுயன்ற 84 பேர் கைது

Published By: Vishnu

11 Sep, 2022 | 05:20 PM
image

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு செங்கலடி கடல்பகுதியில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோதமாக இயந்திரப்படகில் பயணித்த 84 பேரை கடலில் வைத்தும் இவர்களை கடற்கரையில் இருந்து இயந்திரப்படகிற்கு கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் உட்பட 89 பேரை மட்டக்களப்பு செங்கலடி கடல் பிரதேசத்திலும் நாவலடி கடற்கரையிலும் வைத்து  கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று (11) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கடைய சம்பவதினமான இன்று (11) அதிகாலை மட்டக்களப்பு கடல்பரப்பில் கடற்பரைடயினர் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது மட்டு செங்கலடி கடல் பிரப்பில் இயந்திரப்படகு ஒன்று பிரயாணிப்பதை அவதானித்த கடற்படையினர் சுற்றிவளைத்து குறித்த படகை மறித்து சோதனையிட்டபோது அதில் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு பிரயாணித்த 60 ஆண்கள், 13 பெண்கள், மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 11 சிறுவர்கள் உட்பட 84 பேரை கடலில் வைத்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, திருகோணமலை, மடு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை திருகோணமலை கடற்படை முகாமிற்கு கடற்படையினர் அழைத்துச் சென்று திருகோணமலை தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இதேவேளை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை ஏற்றிச் செல்வதற்காக கடலில் காத்திருந்த இயந்திரப்படகிற்கு மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி கடற்கரையில் இருந்து 4 சிறிய இயந்திரப்படகுகளில்  குடியேற்ற காரர்களை ஏற்றி கொண்டு சென்று விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பேரை நாவலடி கடற்கரையில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் 4 படகுகள்; 4 இயந்திரங்கள மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் தீச்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட...

2024-12-10 16:26:09
news-image

எல்ல பகுதியில் அதிகரிக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு...

2024-12-10 16:20:20
news-image

முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் நடைபவனி !

2024-12-10 16:17:47
news-image

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல்...

2024-12-10 16:18:57
news-image

மோட்டார் சைக்கிளிலிருந்து வீழ்ந்த இளைஞன் வாகனம்...

2024-12-10 16:15:28
news-image

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தீர்ப்பு ஏனைய...

2024-12-10 15:47:00
news-image

கிளப் வசந்த படுகொலை ; 8...

2024-12-10 15:48:42
news-image

சகலருக்கும் குறைந்தபட்ச உணவுத்தேவை : உணவுக்...

2024-12-10 15:40:23
news-image

மக்கள் ஆணை எம் அனைவருக்கும் சமூகத்தின்...

2024-12-10 15:20:48
news-image

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 40 இலட்சம்...

2024-12-10 15:11:41
news-image

பொகவந்தலாவையில் என்.சி போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-10 15:00:39
news-image

மகாவலி ஆற்றில் மிதந்த நிலையில் ஆணொருவர்...

2024-12-10 14:40:31