(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் எதிர்வரும் 6 மாதங்களுக்கு மேல் நீடிக்காது. அந்த அமைச்சரவையில் அங்கத்துவம் பெற ஒருபோதும் தான் எதிர்பார்க்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அங்கத்துவம் பெறத் தயாராக இல்லை.
காரணம் தற்போது அவருடனுள்ள தரப்பினருடன் இணைந்து இந்த அரசாங்கத்தை நீண்ட நாட்கள் கொண்டு செல்ல முடியாது. பொதுஜன பெரமுனவின் சிலருக்கு அமைச்சுப்பதவிகளை வழங்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவ்வாறு பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு அமைச்சுபதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லை.
அவ்வாறானவர்களுடன் எம்மாலும் இணைந்து பயணிக்க முடியாது. எதிர்வரும் தேர்தல்களில் நாம் எமது கட்சியிலேயே போட்டியிடுவோம். விமல் வீரவன்ச , வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி எம்முடன் இணைந்து பயணிக்குமா என்று கூற முடியாது. ஆனால் அவர்களையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கே நாம் முயற்சிக்கின்றோம்.
அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனும் இணைவார்கள் என்று நான் எண்ணவில்லை. காரணம் இந்த அரசாங்கம் எதிர்வரும் 6 மாதங்களின் பின்னர் நிலைத்திருக்காது என்ற நிலைப்பாடே காணப்படுகிறது.
எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதியின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். விரைவில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று எண்ணுகின்றேன்.
ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவராவார். சஜித் பிரேமதாச தற்போதுள்ளதை விட தலைமைத்துவத்தை கைகளில் எடுக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாகும் என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM