(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும்.
சர்வதேசத்துடன் அரசாங்கம் இணக்கமாகவே செயற்படும். சட்ட ஒழுங்கை பாதுகாக்க சட்டத்தை அமுல்படுத்துவதை அரச பயங்கரவாதம் என எவ்வாறு குறிப்பிடுவது முற்றிலும் தவறானது என வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டு மக்களின் பேச்சுரிமையினையும், அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளையும் அரசாங்கம் ஒருபோதும் முடக்கவில்லை. ஜனநாயகம் என்ற பெயரில் சட்டத்திற்கு முரணாக வன்முறையில் ஈடுப்பட எவருக்கும் இடமளிக்க முடியாது.
காலி முகத்திடல் போராட்டத்தில் ஒரு தரப்பினர் ஜனநாயக ரீதியில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். ஜனநாயக போராட்டத்தை பிறிதொரு தரப்பினர் ஜனநாயகத்திற்கு முரனாக செயற்பட்டார்கள். பொதுச்சட்டத்தையும், சட்ட ஒழுங்கையும் பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிக்கொள்ளும்.நாட்டின் பொதுச்சட்டத்திற்கமையவே அரசாங்கம் செயற்படும்.சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்படுவது அத்தியாவசியமானது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தை ஒருபோதும் பகைத்துக்கொள்ள மாட்டார். சர்வதேசத்தின் ஒத்துழைப்பை கோரி நிற்கும் போது சர்வதேசத்தை பகைத்துக் கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது. சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை எவ்வாறு அரச பயங்கரவாதம் என குறிப்பிடுவது.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசியல் கொள்கைக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளோம். அனைத்து நெருக்கடிக்களுக்கு மத்தியிலும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM