(எம்.மனோசித்ரா)
அனல் மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை உரிய நேரத்தில் இறக்குமதி செய்யவில்லை எனில் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்கு பின்னர் நாளாந்தம் 10 - 12 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுல்படுத்த வேண்டியேற்படும் என்று இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர தெரிவித்தார்.
நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு கோரல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் கொழும்பில் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நிலக்கரி பிரச்சினை தொடர்பில் நாம் தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வந்தோம். விரைவில் அதனை இறக்குமதி செய்யுமாறும் தொடர்ந்தும் வலியுறுத்தினோம்.
தற்போது கையிருப்பில் உள்ள நிலக்கரி மூலம் ஒக்டோபர் 20 - 25 ஆம் திகதி வரை மாத்திரமே மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
அதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்மெனில் நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
4.5 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது. இந்த விலைமனு கோரல் உரிய நேரத்தில் கிடைக்கப் பெறாவிட்டால் தேவையான நேரத்தில் நிலக்கரியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையும் ஏற்படும்.
ஒக்டோபர் 20 ஆம் திகதி வரையேனும் இந்த நிலக்கரிதொகையை வைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லை எனில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 3 இயந்திரங்களினதும் செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டியேற்படும்.
நிலக்கரி மின் உற்பத்தி தடைபடுமானால் நீர் மூலம் அல்லது எரிபொருள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய நேரிடும். தற்போது மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறுவதால் ஓரளவு நீர் மின் உற்பத்தியை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
எவ்வாறிருப்பினும் மழை வீழ்ச்சியும் குறைவடைந்து , எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படுமாயின் நாளாந்தம் 10 - 12 மணித்தியால மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM