காணி பிரச்சினையில் அண்ணன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தம்பி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

11 Sep, 2022 | 02:14 PM
image

மாத்தறை அக்குரஸ்ஸ, மடோல பிரதேசத்தில் நேற்றிரவு (10) நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட காணி தகராறு, கைகலப்பாக மாறியதில், அண்ணன் தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு உயிரிழந்தவர் தனது மனைவியுடன் பெற்றோர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மூத்த சகோதரர் மேலும் 3 பேருடன் அந்த வீட்டில் மது அருந்திக் கொண்டிருந்தார்.

அங்கு இருவருக்கும் இடையே காணி தொடர்பான தகராறு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி சென்றதையடுத்து மூத்த சகோதரர் கூரிய ஆயுதத்தால் அந்த நபரை தாக்கியுள்ளார்.

குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை அக்குரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:20:29
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54