ரணில் 134 வாக்குகளுடன் ஜனாதிபதியாகி ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து மக்களை நசுக்குகின்றார் - ஜோசப் ஸ்டாலின்

Published By: Vishnu

11 Sep, 2022 | 08:23 PM
image

ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடுகின்றார்.

போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம் என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை 10 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதே ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பாதிப்பு காரணமாக தற்போதும் 46 அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவேற்றியவர்களும் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் தற்போது கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் அவர்களது உண்ணாவிரத போராட்டத்திற்கு பூரண ஆதரவை தெரிவிக்கின்றோம்.

தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல்த் தலைவர்கள் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது, இதனால் சிங்கள மக்களும் எதிர்காலத்தில் பாதிக்கப்படுவார்கள் என தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்தனர். சிங்கள பகுதிகளிலும் இராணுவ முகாம்கள் உருவாகும் என குட்டிமணி தெரிவித்திருந்தார். தற்போது என்ன நடக்கின்றது.

காலிமுகத்திடல் போராட்டம் மிக அமைதியாக இடம்பெற்றது. இதன் காரணமாக நாட்டில் பெரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டு ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ விரட்டியடிக்கப்பட்டார்.

134 வாக்குகளுடன் நாடாளுமன்றில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷ கும்பலுடன் இணைந்து போராட்டக்காரர்களை நசுக்குகின்ற வேலையில் ஈடுபடுகின்றார்.

போராட்டக்காரர்களை அடக்குவதற்காக பயங்கரவாத தடை சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுப்போம்.

நாட்டில் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.பொருட்களின் விலைகளோ அதிகரித்துவிட்டது. இந்நிலையில் எதற்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எங்கிருந்து பணம் செலவிடப்படப்போகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-07 06:02:56
news-image

மட்டக்களப்பு கல்லடிவெட்டை, கானாந்தனை கிராமங்களுக்கு ஒரு...

2025-02-07 04:59:27
news-image

வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த மோட்டர்...

2025-02-07 04:38:38
news-image

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி...

2025-02-07 04:35:26
news-image

யாழ் மக்கள் தவறுதலாக தேசிய மக்கள்...

2025-02-07 04:30:08
news-image

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10...

2025-02-07 04:16:54
news-image

சட்டமா அதிபருக்கு எதிராக சட்டமா அதிபர்...

2025-02-07 03:59:02
news-image

அரசாங்கம் காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பில்...

2025-02-07 03:50:26
news-image

மே 9 வன்முறை: சேதமடைந்த வீடுகளுக்கு...

2025-02-07 03:21:59
news-image

குழாய் நீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட...

2025-02-06 16:21:18
news-image

பேச்சுவார்த்தைகளை சீர்குலைக்கும் வகையில் நயவஞ்சகத்துடன் எவரும்...

2025-02-06 16:23:38
news-image

கொள்கலன்களை விரைவாக பரிசோதித்து விடுவிக்க சுங்கம்...

2025-02-06 19:09:09