சன்னி லியோனின் 'ஓ மை கோஸ்ட்' டீசர் வெளியீடு

By Vishnu

11 Sep, 2022 | 02:17 PM
image

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

'சிந்தனை செய்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் ஆர். யுவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. ஆபாசப்பட நடிகையாக இருந்த சன்னி லியோன், பொலிவுட் திரைப்படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக உருமாறிய பிறகு நடித்திருக்கும் திரைப்படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் சன்னி லியோனுடன் நடிகை தர்ஷா குப்தா, நடிகர்கள் ரமேஷ் திலக், யோகி பாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜாவித் ரியாஸ் மற்றும் தரண் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை வைட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனமும், விஏயு மீடியா என்டர்டெய்ன்மென்ட் என்ற பட நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

கொரோனா காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த இப்படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 

டீசரில் சன்னி லியோன் மாயசேனா எனும் கதாப்பாத்திரத்தில் கவர்ச்சியுயாகவும், பழிக்கு பழி வாங்கும் பேயாகவும் நடித்திருக்கிறார் என தெரிய வருகிறது- அத்துடன் யோகி பாபுவின் ஒன் லைன் பஞ்ச்சும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. டீசரில் சன்னி லியோனின் 'ஓ மை கோஸ்ட்' திரைப்படம் டிசம்பரில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'வடகறி' எனும் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகை சன்னி லியோன், சிறிய இடைவெளிக்குப் பிறகு கதையின் நாயகியாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் 'ஓ மை கோஸ்ட்' படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் வெளியீட்டு...

2022-09-26 22:23:03
news-image

சன்னி லியோன் நடிக்கும் 'ஓ மை...

2022-09-26 21:28:05
news-image

பொன்னியின் செல்வன் ; முக்கிய கதாபாத்திரங்கள்...

2022-09-26 16:40:20
news-image

பண மோசடி வழக்கு ; நடிகை...

2022-09-26 14:59:02
news-image

வேதிகா நடிக்கும் 'மஹால்' பட தொடக்க...

2022-09-25 13:08:17
news-image

மனச்சோர்வுக்கு மருந்தாகும் 'நித்தம் ஒரு வானம்'

2022-09-24 13:59:10
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட புதிய பாடல்...

2022-09-24 12:40:53
news-image

குழலி - விமர்சனம்

2022-09-23 16:37:54
news-image

அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின்...

2022-09-23 16:02:32
news-image

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்'

2022-09-23 11:21:04
news-image

தனுஷின் 'வாத்தி' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

2022-09-21 11:54:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-09-18 14:05:47