சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் தலைமை அதிகாரி சமந்தா பவர் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 10 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கையை வந்தடைந்தார்.
இந்நிலையில், சமந்தா பவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று காலை சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கு 10 ஆம் திகதி வருகைத்தந்த பவர், விவசாயத்துக்கு உதவியளிக்கும் வகையில் 40 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கான நிதியுதவியை வழங்குவதாக அறிவித்தார்.
அத்துடன் இலங்கைக்கு அமரிக்கா இந்த தருணத்தில் உதவி செய்யும் என்ற நிலையில், எதிர்காலத்தில் இலங்கையின் நெருக்கடி தொடர்பில் தமது கவலையையும் வெளிப்படுத்தினார்.
இன்றையதினம் (11) ஜனாதிபதி ரணிலை சந்தித்த பின்னர் சமந்தா பவர் பல்வேறு மட்டத்தினருடனும் சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி ரணிலுடனான சந்திப்பின்போது அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM