யாழில் இருந்து கொழும்பு மகசீன் சிறைச்சாலை நோக்கி கைதிகளின் உறவுகள் பயணம்

Published By: Vishnu

11 Sep, 2022 | 02:17 PM
image

ஐ. நா. அமர்வு எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற  தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு இன்றைய தினம் (10) சர்வதேச கவனமொன்றை ஈர்த்துக் கொள்ளும் வகையில் பயணத்தை மேற்கொண்டனர்.

குரலற்றவர்களின் குரல் அமைப்பு, யாழ் ஊடக அமையத்தில் இன்று (10) மதியம் 2மணியளவில் நடாத்திய ஊடக சந்திப்புக்கு பின்னர் இந்த பயணத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட பேருந்தில் மேற்கொண்டனர்.

தேசிய சிறைக் கைதிகள் தினம் செப்டம்பர் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில் இந்த பயணம் ஆரம்பிக்கப்பட்டதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்தார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சிலர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் 

வேலன் சுவாமிகள், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன், யாழ் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன், யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் யாழ் ஊடக அமையத்திற்கு வருகைதந்து பயணத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு, உறவினர்கள் சென்று வருவதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை கனேடிய தமிழர் பேரவை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், மாநகர உறுப்பினர் பார்த்தீபன் ஊடாக ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வயலிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு ;...

2025-06-13 10:10:33
news-image

யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி...

2025-06-13 09:58:33
news-image

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ; போதைப்பொருட்களுடன்...

2025-06-13 09:53:02
news-image

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ...

2025-06-13 09:32:06
news-image

இன்றைய வானிலை 

2025-06-13 06:11:23
news-image

யாழ். மாநகரசபை மேயர் தெரிவு இன்று;...

2025-06-13 05:16:32
news-image

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார்...

2025-06-13 05:14:37
news-image

போரா மாநாட்டுக்கு அவசியமான வசதிகளை வழங்க...

2025-06-13 05:13:08
news-image

லொக்கு பெட்டி பயன்படுத்திய 2 துப்பாக்கிகள்...

2025-06-13 05:08:14
news-image

கொழும்பு மேயராக சிறந்தவரை பெயரிட்டால் ஆதரவளிப்போம்...

2025-06-13 05:02:20
news-image

வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; தேசபந்து தென்னக்கோன்,...

2025-06-13 04:59:33
news-image

ஜனாதிபதியின் செயலாளர், நீதிமைச்சின் செயலாளரை விசாரிக்க...

2025-06-13 02:36:19