சாதனை படைக்கும் 'சூர்யா 42' பட மோஷன் போஸ்டர்

By T Yuwaraj

10 Sep, 2022 | 11:32 PM
image

தமிழ் திரையுலகின் வணிகத்திற்கு புது வழிகாட்டியாக இருக்கும் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகும், 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் மோசன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

'விஸ்வாசம்', 'அண்ணாத்த' ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'சூர்யா 42' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் சூர்யா பல்வேறு வேடங்களில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவருக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை திஷா படானி நடிக்கிறார். இவர்களுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகியவற்றின் முன்னணி நட்சத்திர நடிகர்களும் நடிக்கிறார்கள். 

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பத்து மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

சூர்யா நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மோசன் போஸ்டர் வடிவிலான காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் நடிகர் சூர்யாவின் தோற்றமும், அவருடைய தோளில் கருடன் வந்து அமர்வதும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது இதனால் இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

நடிகர் சூர்யா,, பாலாவின் 'வணங்கான்', வெற்றிமாறனின் 'வாடிவாசல்' ஆகிய இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தாலும், இதற்கான படப்பிடிப்பு பணிகளில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தால் கிடைத்திருக்கும் இடைவெளியை பயன்படுத்தி, 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகை சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் வெளியீட்டு...

2022-09-26 22:23:03
news-image

சன்னி லியோன் நடிக்கும் 'ஓ மை...

2022-09-26 21:28:05
news-image

பொன்னியின் செல்வன் ; முக்கிய கதாபாத்திரங்கள்...

2022-09-26 16:40:20
news-image

பண மோசடி வழக்கு ; நடிகை...

2022-09-26 14:59:02
news-image

வேதிகா நடிக்கும் 'மஹால்' பட தொடக்க...

2022-09-25 13:08:17
news-image

மனச்சோர்வுக்கு மருந்தாகும் 'நித்தம் ஒரு வானம்'

2022-09-24 13:59:10
news-image

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட புதிய பாடல்...

2022-09-24 12:40:53
news-image

குழலி - விமர்சனம்

2022-09-23 16:37:54
news-image

அஜித் குமார் நடிக்கும் 'துணிவு' படத்தின்...

2022-09-23 16:02:32
news-image

பூஜையுடன் தொடங்கிய தனுஷின் 'கேப்டன் மில்லர்'

2022-09-23 11:21:04
news-image

தனுஷின் 'வாத்தி' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

2022-09-21 11:54:53
news-image

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் இணைந்த...

2022-09-18 14:05:47