(நா.தனுஜா)
இலங்கையிலுள்ள ஊடகங்களின்மீது செல்வாக்குச்செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் 'ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில், இலங்கையின் ஊடகங்கள்மீது சீனா செல்வாக்குச்செலுத்த முயற்சிப்பதாகக் கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலடி வழங்கியுள்ள இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், மேற்படி 'ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற அமெரிக்க நிறுவனமானது சீனாவுடன் தொடர்புடைய விவகாரங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த வரலாற்றைக்கொண்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
'இந்த அறிக்கை உண்மைத்தகவல்களை அடிப்படையாகக்கொண்டதல்ல. மாறாக இது உள்நோக்கங்களை மாத்திரம் அடிப்படையாகக்கொண்டதாகும்' என்று சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் 'நாம் சீனாவின் கதையை இலங்கை உள்ளடங்கலாக ஒட்டுமொத்த உலகுக்கும் தொடர்ந்து கூறுவோம். சீனாவின் அமைதியான முறையிலான அபிவிருத்தி, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு என்பன பற்றிய கதைகளைக் கூறுவதுடன் சீனா - இலங்கைக்கு இடையிலும் ஏனைய உலகநாடுகளுடனும் மிகவும் ஆழமான பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்தி செயற்படுவோம்' என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM