சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நிறுவனமானது தனது வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த காத்திருந்த வீடியோ அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் முன்னணி வகிக்கும் வாட்ஸ் அப்பில் ஏற்கனவே தொலைபேசி வசதியினை வழங்கியிருந்தது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ் அப் பயன்படுத்தும் எல்லா வகை தொலைபேசி பயனாளருக்கும் வீடியோ காஅழைப்பு வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடமாகவே எங்களது பயனாளர்கள் வீடியோ அழைப்பு வசதி வேண்டி என்ற கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை கருத்தில் கொண்டு பல சோதனை முயற்சிகளுக்கு பின்னர் எல்லாவிதமான அண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஐபோன்களிலும் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வசதியினை பெறுவதற்கு வாட்ஸ் அப் நிறுவனம் புதிதாக மேம்படுத்தப்பட்ட வாட்ஸ் அப்பினை  அப்டேட் செய்வதன் மூலம் நீங்களும் பயன் பெறலாம்.