7 உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு - பசந்த யாப்பா அபேவர்தன

Published By: Digital Desk 4

09 Sep, 2022 | 10:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பு ஊடாக விற்பனை செய்யப்படும்  வெள்ளை அரிசி,வெள்ளை நாட்டரிசி,சிவப்பு பருப்பு,வெள்ளை சீனி மற்றும் நெத்தலி உள்ளடங்களாக 7 உணவு பொருட்களின் விலை இன்று வெள்ளிக்கிழமை (9) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள லங்கா சதொச தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,


சதொச வலையமைப்பிற்கமைய இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி ஒரு கிலோ கிராமின் விலை 10 ரூபாவினாலும்,இறக்குமதி செய்யப்படும் நாட்டரிசி ஒரு கிலோகிராமின் விலை 4 ரூபாவினாலும்,ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 19 ரூபாவினாலும்,ஒரு கிலோகிராம் சிவப்பு பருப்பின் விலை 31ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் நெத்தலி ஒரு கிலோகிராமின் விலை 25 ரூபாவினாலும்ஒருகிலோகிராம் வெள்ளை பூண்டின் விலை 155 ரூபாவினாலும்,ஒரு கிலோகிராம் கடலை பருப்பின் விலை 60 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோர் குறைந்த விலைக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடும் இதுவரை ஏற்படவில்லை.

குறைந்த வருமானம் பெறும் தோட்ட தொழிலாளர்கள் உள்ள பிரதேசங்களில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக ஒரு கிலோகிராம் கோதுமை மாவினை 310 ரூபாவுக்கு விற்பனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59