வெண்மை நிற எருக்கன் பூக்கள் ஆஸ்துமா நோய்க்கு மருந்தாகும். வெண்ணிற எருக்கன் பூக்களை அவற்றில் உள்ள நடு நரம்புகளை நீக்கிவிட்டு வெள்ளை இதழ்களை மட்டும் எடுத்து அதனுடன் சம அளவு மிளகு, கிராம்பு, சேர்த்து மை போல அரைத்து கிடைத்த விழுதை மிளகு அளவு மாத்திரைகளாக உருட்டி, நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தி கொள்ளவும். இதனால் இரைப்பு நோய் அதிகரிக்கும் சமயம் ஒரு உருண்டை சாப்பிட்டு நீர் அருந்த உடனே தணியும்.
நல்ல பாம்பு கடித்து விட்டால் உடனே எருக்கன் பூ மொட்டு 5 எடுத்து அதனை வெற்றிலையில் வைத்து நன்றாக மென்று சாப்பிட சொல்ல வேண்டும். இதனால் விஷம் இறங்கிவிடும்.
எருக்கன் பூவை தேவையான அளவு எடுத்து வதக்கி வீக்கம், கட்டிகள் மீது வைத்துக்கட்ட வீக்கம், கட்டி குறையும். ஆறாத புண்கள் இருந்தால் எருக்கன் பூக்களை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு அந்த பொடியை புண்களின் மீது மருந்தாக போட்டு வர சீக்கிரத்தில் புண்கள் ஆறிவிடும்.
எருக்கன் பூ 100 கிராம் , உப்பு 10 கிராம் சேர்த்து அரைத்து வடைபோல் தட்டி உலர்த்தி புடமிட்டு சாம்பலாக்கி அரைத்தால் சிறந்த பற்பொடி கிடைக்கும். இதில் பல் துலக்கினால் பல்சொத்தை, புழு, பல்லரணை, பல் கூச்சம் யாவும் குணமடையும்.
பழுத்த எருக்கன் இலையை குதிங்கால் வீக்கத்தின் மீது வைத்து, சுட்ட செங்கல்லை அதன் மீது வைத்து, ஒத்தடம் கொடுத்துவர குணமடையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM