3 தினங்கள் உலகின் 25 ஆவது பெரும் செல்வந்தரான நபர் : எவ்வாறு ?

Published By: Vishnu

09 Sep, 2022 | 01:13 PM
image

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒரு­வ­ருக்கு வங்கிக் கணக்கில் 50 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் வைப்புச் செய்­யப்­பட்­டதால் அவர் உலகின் 25 ஆவது மிகப் பெரிய செல்­வந்­த­ரானார். எனினும், அவரின் அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்­க­வில்லை. வங்­கியின் தவ­றி­னா­லேயே அவரின் கணக்கில் இவ்­வ­ளவு பெருந்­தொகை வைப்புச் செய்­யப்­பட்­டமை கண்­டு­பி­டிக்­கப்­பட்டு, அக்­க­ணக்­கி­லி­ருந்து பணம் அகற்­றப்­பட்­டது.

லூசி­யானா மாநி­லத்தைச் சேர்ந்த டெரன் ஜேம்ஸ் என்­ப­வ­ருக்கே இந்த விநோத அனு­பவம் ஏற்­பட்­டது.

‍ெடரன் ஜேம்ஸை தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட அவரின் மனைவி, ஜேம்ஸின் வங்கிக் கணக்கில் 50,000,000,000 டொலர் (5,000 கோடி டொலர்) வைப்புச் செய்­யப்­பட்­ட­தாக தொலை­பே­சிக்கு தகவல் வந்­துள்­ள­தாக தெரி­வித்தார்.

இத்­த­க­வலை அறிந்து டெரன் ஜேம்ஸ் பெரும் வியப்­ப­டைந்தார். அவரின் குடும்­பத்தின் ஏனைய அங்­கத்­த­வர்­களும் பெரும் வியப்­ப­டைந்­தனர்.

தற்­போ­தைய நிலையில், ஒருவர் 5,000 கோடி டொலர்­க­ளுக்கு அதி­ப­தி­யானால், அவர் உலகின் 25 ஆவது மிகப் பெரிய செல்­வந்­த­ராக இருப்பார். 5,000 கோடி டொலர்கள் என்பது பிரிட்­டனின் புகழ்­பெற்ற தொழி­ல­திபர் ரிச்சர்ட் பிரான்­ஸனின் சொத்து மதிப்­பை­விட 10 மடங்கு அதி­க­மாகும்.

'அப்­பணம் எங்­கி­ருந்து வந்­தி­ருக் கும் என நான் யோசித்தேன். எனக்கு அத்­தொகை அபத்­த­மாக தெரிந்­தது. ஏனெனில் ஒரு இலக்­கத்தின் பின்னால் இத்­தனை பூச்­சி­யங்­களை தான் ஒரு­போதும் கண்­ட­தில்லை' என நேர்­காணல் ஒன்றில் டெரன் ஜேம்ஸ் கூறினார்.

அப்­ப­ணத்தை பயன்­ப­டுத்திக் கொள்­ளாமல், இது குறித்து அவர் வங்­கிக்கு அறி­வித்தார். 

அதை­ய­டுத்து பணத்தை மீளப் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை வங்கி மேற்­கொண்­டது.

3 தினங்கள் மாத்­தி­ரமே மேற்­படி பணம் அவரின் வங்கிக் கணக்கில் இருந்­தது. அதன் பின் கணக்­கி­லி­ருந்து பணம் மறைந்­தது.

தமது தவ­றொன்று கார­ண­மாக  ஜேம்ஸின் வங்கிக் கணக்கில் பணம் வைப்­பீடு செய்­யப்­பட்­டி­ருந்­த­தாக அவ்­வங்கி தெரி­வித்­தது.

இது தொடர்­பாக டெரன்ஜேம்ஸ் மேலும் கூறு­கையில்,

'நாம் அப்­ப­ணத்தை செல­விட முற்­ப­ட­வில்லை. அது எமது பணம் அல்ல என்­பது எமக்குத் தெரியும். உண்­மை­யான உரி­மை­யா­ள­ரிடம் அப்­பணம் சென்­ற­டைய வேண்டும் என நான் விரும்­பினேன். அதனால் வங்­கி­யுடன் தொடர்புகொண்டேன். 

ஒரு சனிக்­கி­ழமை, வங்கிக் கணக்­குக்கு அப்­பணம் வந்­தது. அடுத்த செவ்­வாய்க்­கி­ழமை. வங்கிக் கணக்­கி­லி­ருந்து பணம் அகற்­றப்­பட்­டு­விட்­டது' எனத் தெரி­வித்­துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17