குருநாகல், மஸ்பொத பிரதேசத்தில் பொலிஸாரின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார்  தேடிவருகின்றனர்.

குருநாகல், மஸ்பொத பிரதேசத்தில் பொலிஸாரின் பெற்றோல் வாகனம் மீது இன்று காலை இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்  உதவி  பொலிஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்த நிலையில், 3 பொலிஸார் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.