மாண­வி­களை இர­க­சி­ய­மாக படம்­பி­டித்த ஆசி­ரி­ய­ருக்கு சிறை

By Vishnu

09 Sep, 2022 | 05:55 PM
image

பிரிட்­டனைச் சேர்ந்த ஆண் ஆசி­ரியர் ஒருவர், இர­க­சிய கெமரா மூலம் பாட­சாலை மாண­வி­களை இர­க­சி­ய­மாக படம்­பி­டித்த குற்­றச்­சாட்டில் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ளார்.

31 வய­தான ஜெப்ரி வில்சன் எனும் இந்த ஆசி­ரியர், இங்­கி­லாந்தின் கேம்­பி­ரிட்ஜ்­ஷயர் பிராந்­தி­யத்­தி­லுள்ள இரு பாட­சா­லை­களில் பணி­யாற்­றி­ய­போது இவ்­வாறு மாண­வி­களை இர­க­சி­ய­மாக படம்­பி­டித்தார் என குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்­டன.

இவர் 6 மாத காலத்தில் பிடித்த 45 படங்­களை பொலிஸார்; இவ்­வ­ருட முற்­ப­கு­தியில் கைப்­பற்­றினர்.

அத்­துடன் சிறார்­களின் சுமார் 53,000 ஆபா­சப்­ப­டங்கள், வீடி­யோக்­க­ளையும் அதி­கா­ரிகள் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இவர் பேனாவில் பொருத்­தப்­பட்ட கெம­ராவை பயன்­ப­டுத்தி மாண­வி­களை இர­க­சி­ய­மாக படம்­பி­டித்தார் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். மேற்­படி பேனா­வுடன் கெமரா பொருத்­தப்­பட்ட சுவர் கடி­கா­ரத்­தையும் அதி­கா­ரிகள் கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

இவ்­வ­ழக்கை விசாரித்த பீட்­டர்­பரோஹ் கிரவுண் நீதி­மன்றம், வில்­ச­னுக்கு ஒரு வருட சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துது. அத்­துடன் அவர் 10 வரு­ட­காலம், பாலியல் தீங்கு தடுப்பு உத்­த­ர­வுக்கு கட்­டுப்­பட வேண்டும் எனவும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பொலிஸ் அதி­காரி ஒருவர் இது தொடர்­பாக கூறு­கையில், 'இந்த உண்­மையில் கலக்­க­ம­டையச் செய்யும் வழக்கு. நம்­பிக்கை கொள்ளச் செய்யும் ஒரு பத­வியில் இருந்­து­கொண்டு, தனது சுய­லா­பத்­துக்­காக அந்த நம்­பிக்­கையை அவர் துஷ்­பி­ர­யோகம் செய்துள்ளார்.

அவரின் குற்றச்செயல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது அவர் நீதியை எதிர்கொண்டுள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்திரேலியாவில் சுறா தாக்கி சிறுமி பலி

2023-02-05 12:20:09
news-image

புட்டினின் நாஜி கருத்திற்கு அவுஸ்திரேலிய பிரதமர்...

2023-02-04 12:05:39
news-image

அசாம் மாநிலத்தில் சிறுமிகள் திருமணம் தொடர்பில்...

2023-02-03 16:40:28
news-image

அதானி குழும விவகாரம் | சுதந்திரமான...

2023-02-03 15:59:31
news-image

தென் கொரியாவின் முன்னாள் நீதியமைச்சருக்கு 2...

2023-02-03 14:45:41
news-image

ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் வாழிடமாகும் அசாம் காசிரங்கா...

2023-02-03 15:35:16
news-image

அபுதாபியிலிருந்து கேரளா நோக்கி பறந்த விமான...

2023-02-03 12:44:12
news-image

ஹரியானா - குர்கானில் திபெத்திய அகதிகள்...

2023-02-03 13:12:36
news-image

மீண்டும் 15% சரிவை சந்தித்த அதானி...

2023-02-03 12:52:25
news-image

காஷ்மீரில் குண்டுவெடிப்புகளில் தொடர்பு - தீவிரவாதியாக...

2023-02-03 12:12:52
news-image

சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்க...

2023-02-03 12:46:00
news-image

தனது வெற்றிக்கு மோடி காரணம் என்பதை...

2023-02-03 11:12:17