இங்­கி­லாந்து கனிஷ்ட கால்­பந்­தாட்ட அணியின் முன்னாள் வீராங்­கனை கஞ்சா கடத்­திய குற்­றச்­சாட்டில் சிறை­யி­ல­டைப்பு

By Vishnu

09 Sep, 2022 | 11:41 AM
image

இங்­கி­லாந்தின் 19 வய­துக்­குட்­பட்ட கால்­பந்­தாட்ட அணியின் முன்னாள் வீராங்­கனை ஒருவர், போதைப்­பொருள் கடத்தல் குற்­றச்­சாட்டில் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ளார்.

ஃபெய் டன் எனும் இப்பெண், வெற்­றி­க­ர­மான வர்த்­த­க­ரா­கவும் விளங்­கினார். இங்­கி­லாந்து கனிஷ்ட அணியில் நம்­பிக்­கை­ய­ளிக்கும் வீராங்­க­னை­யாக விளங்­கிய அவர், கால்­பந்­தாட்டப் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்வு பெற்ற பின்னர், லிவர்பூல் நகரில் கால்­பந்­தாட்ட பயிற்சி நிலை­ய­மொன்­றையும் ஸ்தாபித்தார்.

தற்­போது அவ­ருக்கு  38 வய­தா­கு­கி­றது.  இந்­நி­லையில், கஞ்சா போதைப்­பொருள் கடத்­தி­ய­தாக அவர் மீது குற்றம்  சுமத்­தப்­பட்­டது. 

10 இலட்சம் இறாத்தல் கஞ்சா கடத்தல் நட­வ­டிக்­கையில் அவ­ருக்கு தொடர்­பி­ருப்­ப­தாக அதி­கா­ரிகள் கூறினர்.

கஞ்சா உற்­பத்­தி­யுடன், விநி­யோக நட­வ­டிக்­கையில் சம்­பந்­தப்­பட்­ட­துடன்,  திட்­ட­மி­டப்­பட்ட குற்­றச்­செ­யல்­களில் ஈடு­படும் குழு­வொன்றின் கணக்­கா­ள­ரா­கவும் அவர் பணி­யாற்­றி­யதை அதி­கா­ரிகள் கண்­டு­பி­டித்­தனர். 

கப்­ப­லொன்றில் ஸ்பெய்­னுக்கு பயணம் செய்­த­போது, தனது காற்­சட்­டைகள் ஒளித்து வைத்து பணம் கடத்­தி­ய­தா­கவும் அவர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டது.

கஞ்சா விநி­யோகம் மற்றும் பணச்­ச­லவை குற்­றச்­சாட்­டு­களை ஃபெய் டன் ஒப்­புக்­கொண்டார். 

இவ்­வ­ழக்கை விசா­ரித்த லிவர்பூல் கிரவுண் நீதி­மன்றம் ஃபெய் டன்­னுக்கு 3 வரு­டங்கள் மற்றும் 9 மாதங்கள் சிறைத்­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

இப்­பெண்ணின் தந்­தை­யான மைக்கல் டன்னும் (68) இப்­போ­தைப்­பொருள் கடத்­தலில் சம்­பந்­தப்­பட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இதனால் மைக்கல் டன்­னுக்கு 2 வரு­டங்­க­ளுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்ட 2 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

தனது 18 வயதில், ஐரோப்­பிய கால்­தாட்டச் சங்­கங்­களின் ஒன்­றி­யத்தின் 19 வய­துக்­குட்­பட்ட மகளிர் அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்­டி­களில் இங்­கி­லாந்து அணி அரை இறுதிப் போட்­டிக்கு தகுதி பெற உத­வியவர் ஃபெய் டன்.

அச்­சுற்­றுப்­போட்­டியில் டென்மார்க், சுவிட்­ஸர்­லாந்து அணி­க­ளுக்கு இடை­யி­லான போட்­டி­களில் அவர் கோல்­களைப் புகுத்­தினார். 

ட்ரான்­மெயர் ரோவர்ஸ் கழகத்துக் காக விளையாடிய ஃபெய் டன், 2003 ஆம் அண்டு லீட்ஸ் யுனைடெட் கழகத்தில் இணைந்தார். 

2000 ஆம் ஆண்டு சௌத்தாம்டன் கழகத்துக்கு எதிரான போட்டியில் ஹெட்றிக் கோல்களையும் அவர் புகுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம்...

2022-12-09 16:53:21
news-image

பாதுகாப்பு, மீட்பு பணியில் 16,000 போலீசார்:...

2022-12-09 16:48:41
news-image

பிரிட்டன், இத்தாலி, ஜப்பான் இணைந்து நவீன...

2022-12-09 15:40:44
news-image

ஈரானில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பெண்களின் முகங்களையும்...

2022-12-09 15:34:50
news-image

புர்கா அணிந்து நடனமாடிய 4 ஆண்...

2022-12-09 13:22:54
news-image

சீனாவில் மாணவர்கள் போராட்டம்

2022-12-09 13:27:25
news-image

ரஷ்ய வணிக வளாகத்தில் கால்பந்து மைதானம்...

2022-12-09 12:30:43
news-image

'அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுங்கள்'...

2022-12-09 13:19:06
news-image

இலங்கை இனப்படுகொலை: இந்தியா வாக்களிக்காததன் காரணம்...

2022-12-09 12:09:58
news-image

ஐரோப்பிய எல்லைகளில் குடியேற்றவாசிகள் முன்னர் ஒருபோதும்...

2022-12-09 11:56:20
news-image

ஒரு பாலினத் திருமணங்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்...

2022-12-09 11:49:09
news-image

இந்தியாவில் திருமண நிகழ்வில் எரிவாயு சிலிண்டர்கள்...

2022-12-09 11:17:28